அசுர வேகத்தில் சீறிய நல்ல பாம்பு! திகைத்து நின்ற பெண்! வளர்ப்பு நாய் செய்த தியாகம்;

தன்னை வளர்த்த எஜமானரின் குடும்பத்தை காக்க வேண்டும் என்ற உணர்வில் நாயொன்று உயிரிழந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் ஜூப்லி என்னும் தெரு அமைந்துள்ளது. இங்கு பாபு என்பவரின் குடும்பம் வசித்து வருகிறது. பாபு வெளிநாட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் பொன்செல்வி. இவர் நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இத்தம்பதியினருக்கு இரட்டை மகள்கள் உள்ளனர்.

இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.பொன்செல்வி தன் வீட்டில் "டைசன்" இனத்தை சேர்ந்த 2 நாய்களை வளர்த்து வருகிறார். ஆண் நாய்க்கு "அப்பு" என்றும், பெண் நாய்க்கு "நிம்மி" என்றும் பெயரிட்டனர். இரண்டு நாய்களையுமே பொன்செல்வி நன்றாக வளர்த்தார்.

நேற்றிரவு இரண்டு நாய்களையும் கட்டிப்போட்டு பொன்செல்வியும் அவருடைய 2 மகள்களும் வீட்டில் உறங்கினர். வீட்டின் முன்பகுதியில் திடீரென்று 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. இதனை கண்ட ஆண் நாயானது பாம்புடன் சண்டை போட்டது. பாம்பானது நாயை கொத்தியது. இருப்பினும் நாய் பாம்பை கடித்து குதறி மொட்டைமாடி வரை இழுத்துச்சென்றது. சில நிமிடங்களிலேயே நாயும் பாம்பும் அங்கேயே இறந்து போயின.

இன்று காலையில் வெளியே வந்த பொன்செல்வி, ஆண் நாயை காணவில்லை என்று தேடினார். அப்போது மொட்டை மாடியில் நாயும் பாம்பும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தன் உயிரை கொடுத்து தங்களை காப்பாற்றிய நாயின் கடமை உணர்ச்சியை கண்ட பொன்செல்வி கண்ணீர் விட்டு அழுதார்.

பின்னர் நாயையும் பாம்பையும் அருகிலுள்ள சுடுகாட்டில் புதைத்தார்.தன் உயிரை கொடுத்தாவது தன் எஜமானரின் உயிரை காக்க வேண்டும் என்று போராடிய நாயின் தன்மையை அக்கம்பக்கத்தினர் வியப்பாக பார்த்து வருகின்றனர்.