எஜமானரின் குழந்தையை பாதுகாப்பதற்காக கொடிய பாம்பை விழுங்கி நாய் உயிரிழந்த சம்பவமொன்று அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்களை நெருங்கிய கொடிய விஷப் பாம்பு! தலையை துண்டாக கவ்வி காப்பாற்றிய வளர்ப்பு நாய்! ஆனால்..? பிறகு நேர்ந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

அமெரிக்கா நாட்டில் ஃப்ளோரிடா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இங்கு ரிசர்ட்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் ஜினா. இத்தம்பதியினருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஜூலியஸ் என்ற நாயை வளர்த்து வந்தனர்.
சில நாட்களுக்கு முன்னர் இவர்களுடைய மகனான ஓரிலே அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் எதிர்பார்க்காத நேரத்தில் ஜுலியஸ் அவன் அருகே பாய்ந்தது. சிறுவனின் அருகே மிகவும் கொடிய பாம்பு ஒன்று நெளிந்து கொண்டு இருந்ததால் ஜுலியஸ் அவ்வாறு செய்துள்ளது.
அந்த பாம்புடன் ஜூலியஸ் கடுமையாக சண்டை போட்டது. ஜூலியஸின் கண்கள் சொருகிக்கொண்டு போனது கண்ட ஓரிலே அதிர்ச்சி அடைந்தான். உடனடியாக சென்று தன்னுடைய தந்தையை அவன் அழைத்து வந்தான். அப்போது ஜூலியஸின் உடம்பில் 4 பாம்புக்கடிகள் இருந்துள்ளன. ஆனால் அந்த கொடிய பாம்பின் தலையை ஜுலியஸ் விழங்கியுள்ளது.
ரிச்சர்ட்சன் அவசர அவசரமாக நாயை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் நாயை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
நாயின் இறப்பு குறித்து ரிச்சர்ட்சன் கூறுகையில், "எங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஜூலியஸுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கோம். என்னுடைய மகன்கள் ஒன்றாகவே நான் ஜுலியஸை பாவித்தேன். இது எங்கள் குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு" என்று கண்ணீர் மல்க கூறினார்.
இந்த சம்பவமானது அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது