சுதீஷ்க்குத் தேவையா இந்த வேலை..? கார்ட்டூன் உருவாக்கிய கலாட்டா

கடந்த தேர்தல் சமயத்தில் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருந்த நேரத்தில், துரைமுருகனை சந்திக்க ஒரு குழுவை அனுப்பினார் சுதீஷ் அந்த விவகாரத்தை தி.மு.க. அம்பலப்படுத்திவிடவே, அவமானப்பட்டுப் போனார்.


சமீபத்தில் ஒரு நாளிதழில், விஜயகாந்தை வைத்து பிரேமலதா தேர்தலுக்கு ஏலம் விடுவது போன்று ஒரு கார்ட்டூன் போட்டிருந்தது. அதற்கு போட்டியாக விடுகிறேன் என்று சொல்லி, முன்பு விஜயகாந்தை அழைப்பதற்கு கருணாநிதி காலில் விழுந்த ஒரு கார்ட்டூனை போட்டுவிட்டார்.

இந்த தேர்தலில் இப்போதும் தி.மு.க.வுடன் பேசிக்கொண்டு இருக்கும் சுதீஷ், இது எத்தனை பெரிய அனர்த்தமாக மாறும் என்பது புரியாமல் அப்படி ஒரு கார்ட்டூன் வெளியிட, எக்கச்சக்க மீம்ஸ்கள் தெறிக்கத் தொடங்கிவிட்டன. உடனே ஓடோடிப் போய் அழித்திருக்கிறார் சுதீஷ்.

அ.தி.மு.க. கூட்டணியில் அடக்கமாக இருப்பதைவிட்டு, இப்படி கண்ட இடத்துக்கும் ஆசைப்பட்டால் சிக்கல்தான் வரும். இதை எப்போது தான் பிரேமலதாவும், சுதீஷும் புரிந்துகொள்ளப் போகிறார்களோ..?