இரவுப் பணி செய்வது ஆபத்து என்று சொன்னால், நான் அதற்குப் பதில் கூடுதலாக ஒரு மணி நேரம் பகலில் தூங்குகிறேன் என்று சொல்வது சரியான பதில் அல்ல. இரவு தூங்கினால் மட்டுமே ரத்தம் தூய்மை பெறும் உடல் உஷ்ணம் குறையும். பகலில் தூங்கினால் நோய் தான் வரும். பகலில் அரை மணி நேரம் ஓய்வு எடுக்கலாமே தவிர தூங்க கூடாது.
நைட் ஷிப்ட் செல்பவர்கள் பகலில் தூங்குவதால் உடல் சமநிலை அடைகிறதா ? மருத்துவ எச்சரிக்கை ரிப்போர்ட் !!

இரவு தூங்குவதற்கு முன்பு எளிய உணவை மட்டுமே எடுக்க வேண்டும். இரவு 8 மணிக்கு மேல் உணவு எடுப்பது உங்கள் கல்லீரலை கசாப்பு கடைக்கு அனுப்புவதற்கு சமம். தூங்கும் முன் வயிற்றில் எதுவும் இருக்கக்கூடாது.
இரவு நீங்கள் கண் விழிக்கும் ஒவ்வொரு வினாடியும், உங்களின் இறுதி நாள் குறிக்கப்பட்டு வருகிறது என்பதுதான் அர்த்தம். தூக்கத்தில் கனவு வந்தால் அது கெட்ட தூக்கம். கனவு இல்லை என்றால் தான் அது நல்ல ஆழ்ந்த தூக்கம். பெரும்பாலானோருக்கு ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை.
அதிக உணவு, அதிக உழைப்பு, ஓய்வு இன்மை போன்ற மூன்றையும் சரி செய்தால் உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வரும். இப்படி ஆழ்ந்த தூக்கம் தூங்கினால், காலையில் உடல் இலேசாக இருக்கும். சோம்பல் இன்றி சுறுசுறுப்பாக பணியாற்ற முடியும்.
அதனால் இரவுப் பணி இன்றி பகலில் மட்டுமே பணியாற்றுங்கள். அதுதான் ஆரோக்கியத்தின் வழி.