கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு திடீரென நீரிழிவு நோய் உண்டாகுமா ??

கர்ப்ப காலத்தில் பெண்ணுக்கு ஏராளமான அசெளகர்யங்களும் உடல் உபாதைகளும் தோன்றுவதுண்டு. அவற்றில் முக்கியமான ஒன்று கர்ப்பகால நீரிழிவு. இப்போது இந்தியாவில் ஏராளமான கர்ப்பிணிகளை பாதிக்கும் பிரச்னையாக வளர்ந்துவருகிறது கர்ப்பகால நிரிழிவு.


·         கர்ப்பப்பையில் கரு வளர்ச்சி அடையும்போது, கர்ப்பிணியின் உடலில் சுரக்கப்படும் ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கிறது.

·         ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதால் கருவுற்ற தாய்மார்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கிறது.

·         சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு ஏற்ப, தாய்மார்களின் கணையம் கூடுதலாக இன்சுலினை சுரந்து, அதிகப்படியான சர்க்கரையை ரத்தத்தில் கரைக்க வேண்டும்.

·         ஆனால் சில கர்ப்பிணிகளின் கணையத்தால் கூடுதலாக தேவைப்படும் இன்சுலினை சுரக்க முடிவதில்லை. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, கர்ப்பகால நீரிழிவு நோய் உண்டாகிறது. அதனால் அதிகப்படியான ஹார்மோன் சுரப்புதான், இன்சுலின் சுரப்பு கட்டுப்படுத்தப்படுவதற்கு காரணமாக அமைகிறது.

கர்ப்பகால நீரிழிவு காணப்பட்டால், கர்ப்பிணிக்கு கர்ப்பநிலைக்கு முன்பாகவே நீரிழிவு நோய் இருந்திருக்கும் என சந்தேகப்பட வேண்டியதில்லை. அதேபோல் குழந்தை பிறந்த பிறகும் நீரிழிவு நீடிக்கும் என்று அச்சப்படவும் அவசியம் இல்லை. கர்ப்பகால நீரிழிவு குறித்து மேலும் சில முக்கிய தகவல்களை நாளை பார்க்கலாம்.