பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழந்த சம்பவமானது தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிற்காமல் வந்து கொண்டிருந்த ரத்தம்! பிரசவ அறையில் துடிதுடித்த கர்ப்பிணி! தருமபுரி அதிர்ச்சி!

தர்மபுரி மாவட்டத்தில் கோட்டப்பட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு மணிகண்டன் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய வயது 30. இவர் அப்பகுதியில் முடிதிருத்தும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் பிரியா. பிரியாவின் வயது 24. பிரியாவின் சொந்த ஊரானது கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு கிராமம் என்பதாகும். இத்தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். 3-வது முறையாக பிரியா கருவுற்றிருந்தார்.
நேற்றிரவு அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பாரூர் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அதிகாலை 2:55 மணி அளவில் பிரியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பிறகு அவருக்கு அதிகளவில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்த இயலாததால் 5 மணி அளவில் பிரியா இறந்து போனார். பிரியா இறந்து போனதை மருத்துவர்கள் அவருடைய உறவினர்களிடம் கூறியபோது, அவர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். மேலும் பிரியாவின் உடலை வாங்க மறுத்து அங்கேயே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரியாவின் உறவினர் ஒருவர் கூறுகையில், "பிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். மருத்துவர்கள் அவரை எருமை மாடு போல் இருக்கிறாய் என்று கேவலமாக திட்டினர். மேலும் குழந்தை வெளியே வருவதற்கு நன்றாக முக்கு என்றும் திட்டினர். அதன்பிறகு 2 மணி நேரம் கழித்து இறந்து விட்டதாக கூறினர். ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டதால் தான் பிரியா இறந்து போனார். மருத்துவர்கள் அலட்சியமாக இல்லாமலிருந்திருந்தால் பிரியாவின் உயிரை காப்பாற்றியிருக்கலாம்" என்று கூறினார்.
இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், "மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் அறுவை சிகிச்சைகளை செய்து வருகிறோம். நேற்று பிரியாவிற்கு பிரசவம் பார்த்த போது அறையில் மருத்துவரும், நர்சும் இருந்தனர். அதிக ரத்தப் போக்கினால் மட்டுமே இறந்து போனார். டாக்டர்களின் கவனக்குறைவால் அவர் இருந்ததாக கூறப்படுவது தவறு" என்று கூறினார்.
இந்த செய்தியானது தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.