டிரைவரின் மனைவியுடன் உல்லாசமாக இருந்த டாக்டர்! கண்டுபிடித்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்!

கார் டிரைவரின் மனைவியுடனான கள்ளக்காதல் காரணமாக, தனது அவரை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.


மத்தியப் பிரதேசம் மாநிலத்தில்தான், இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஹோசங்காபாத் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சுனில் மாந்த்ரி (56 வயது). ஆர்த்தோ டாக்டரான இவரது மனைவி பொடிக் கடை ஒன்று நடத்தி வந்துள்ளார்.

 

சமீபத்தில், மாந்த்ரியின் மனைவி உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். டாக்டர் மனைவியை, இழந்த பிறகு பொடிக் கடையை நிர்வகிக்க ஒரு பெண் வேண்டும் என்று கேட்டள்ளார்.

 

அதற்கு பச்சோரி என்பவர் தனது மனைவி மாந்த்ரியை டாக்டரிடம் வேலைக்கு சேர்ந்துள்ளார்.  பெண்ணின் அழகில் மயங்கிய டாக்டர் அவருடன் நெருக்கமாகியுள்ளார். டாக்டர் என்பதால் கை நிறைய பணம் கிடைக்கும் என்றும் கள்ளக்காதலி ஆகியுள்ளார.

 

ஒரு நாள் மனைவி வீட்டுக்கு வர தாமதம் ஆகவே அவரை அழைத்து வர பச்சோரி சென்றுள்ளார். அப்போது டாக்டருடன் தனது மனைவி உல்லாசமாக இருப்பதை பார்த்து பச்சோரி அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக மருத்துவரிடம் சண்டை போட்டுள்ளார்

 

இதுபற்றி அடிக்கடி அவர் தகராறு செய்ய தொடங்கியுள்ளார். உண்மை என்னவென்று சொல்லாமல், சுனில் மாந்த்ரி, பச்சோரியை தாஜா செய்யும் வகையில், தனது கார் டிரைவராக வேலைக்கு சேர்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அவருக்கு, மாதம் ரூ.16,000 சம்பளமும் கொடுத்து வந்துள்ளார்

 

எனினும், நாளுக்கு நாள், பச்சோரிக்கு சந்தேகம் வலுத்து வந்துள்ளது. தனது மனைவியை விட்டு விலகும்படி, அவர் டாக்டரை மிரட்ட தொடங்கியிருக்கிறார். இதையடுத்து, கடும் ஆத்திரமடைந்த டாக்டர் மாந்த்ரி, அவரை பழிவாங்க தீர்மானித்துள்ளார்

 

சென்ற திங்களன்று, பச்சோரிக்கு பல் வலி ஏற்பட்டுள்ளது. அதற்காக, டாக்டரிடம் சிகிச்சை பெற வந்துள்ளார். அப்போது திடீரென தனது அறுவை சிகிச்சை செய்யும் கத்தியால் பச்சோரியின் கழுத்தை, டாக்டர் அறுத்துள்ளார். அதில், அவர் துடிதுடித்து இறந்துவிட்டார்

 

இதையடுத்து, பச்சோரியின் சடலத்தை துண்டு துண்டாகக் கூறு போட்ட டாக்டர், அதனை என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பியுள்ளார். இதற்குள்ளாக, திங்கள்கிழமை பொழுது போய், செவ்வாய்க்கிழமை வந்துவிட்டது. வேறு வழியின்றி, சடலத்தின் பாகங்களை ஆசிட் ஊற்றி எரிக்க முடிவு செய்த டாக்டர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்

 

டாக்டரின் நடத்தை சந்தேகப்படும்படி உள்ளதாக, அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதன்பேரில், போலீசார் அங்கு விரைந்து சென்றபோது, டாக்டரின் வீடு முழுக்க ரத்தக்கறை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, பாத்ரூமில் தேடியபோது, ஆசிட்டில் எரிந்த நிலையில், உடல்பாகங்கள் இருப்பதையும் கண்டறிந்தனர்

 

போலீசாரை பார்த்ததும் வேறு வழியின்றி, டாக்டர் மாந்த்ரி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்த போலீசார், அங்கிருந்த உடல் பாகங்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

கள்ளக்காதலுக்கு ஆசைப்பட்டு, கொடூர கொலையை செய்துள்ள டாக்டரை பார்த்து அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.