நடுரோட்டில் உயிருக்குத் துடித்த வாலிபர்..! டாக்டரின் மனிதாபிமானத்துக்குக் குவியும் பாராட்டு

நடுரோட்டில் வலிப்பு வந்து துடித்துக்கொண்டிருந்த இளைஞருக்கு சரியான சமயத்தில் முதலுதவி அளித்த மருத்துவருக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.


பெரியசாமி என்ற மருத்துவர் ஒருவர் புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடிக்கு தன் காரில் சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும்பொழுது நடுரோட்டில் ஒரு இளைஞர் வலிப்பு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த இளைஞரை பார்த்த மருத்துவர் பெரியசாமி உடனே தன்னுடைய காரை நிறுத்தி விட்டார்.

பின்னர் தன்னுடைய காரிலிருந்து இறங்கி நடுரோட்டில் வலிப்பு வந்த துடித்துக்கொண்டிருந்த இளைஞருக்கு தேவையான முதலுதவி அளித்து அவரை ஆபத்திலிருந்து காப்பாற்றினார். ஆம்புலன்சுக்கு போன் செய்து அந்த இளைஞரை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் மருத்துவரை பெரிதும் பாராட்டினர்.

இதனைப் பற்றி மருத்துவரிடம் கேட்டபொழுது, அவர் நான் எப்பொழுதும் மருத்துவமனைகளில் செய்வதை இங்கு நடுரோட்டில் செய்திருக்கிறேன் . அவ்வளவுதான் இருப்பினும் ஒருவரது உயிரை நான் காப்பாற்றி இருக்கிறேன் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். ஆனால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவரை பார்த்து பார்க்காதது போல் பலரும் கடந்து சென்றிருக்கின்றனர். அதை நினைத்தால்தான் எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது என்றும் மருத்துவர் பெரியசாமி கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இம்மாதிரியான முதலுதவி சிகிச்சைகளை மருத்துவர்தான் அளிக்க வேண்டும் என்பது கிடையாது அனைவராலும் இதனை அளிக்க இயலும். இதனால் மிக எளிமையான முறையில் ஒருவரது உயிரை காப்பாற்றவும் முடியும் என கூறினார். முதலில் இம்மாதிரியான நபர்களுக்கு மூச்சு விடுவது மிகவும் கடினமாக இருக்கும் . முதலில் அவர்களுக்கு மூச்சை சீராக விடுவதற்கு நாம் உதவி செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபரை ஒருகளித்து படுக்க வைத்து, மேல் காலை மடக்கி கீழே சாயாத அளவுக்கு வைத்து, கழுத்தை மேல் நோக்கி தூக்கி பிடித்துக் கொள்ள வேண்டும் அப்படி பிடிக்கும் பொழுது அவருக்கு மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் குறைய ஆரம்பிக்கும். இதன் மூலம் வாய் வழியாக நுரை வெளியே வந்து மூச்சை உள்ளே செல்வதற்கு ஏதுவாக இருக்கும்.

ரோட்டில் வலிப்பு வந்து அவதி பட்டிருந்த இளைஞர் செயற்கை பற்களை பொறுத்திருந்து இருக்கிறார் . இவருடைய செயற்கை பற்கள் தொண்டைக்குழிக்குள் சிக்கியிருந்தது . அதனை இலகுவாக அகற்றி விட்டோம். இதனால் அவர்கள் உயிருக்கு போராடிய சூழ்நிலையில் இருந்து மீட்கப்பட்ட ஒருவேளை அந்த செயற்கை பல்லானது மூச்சுக்குழலில் சிக்கியிருந்தால் மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும் என்றும் மருத்துவர் பெரியசாமி கூறியிருக்கிறார்.