உனக்கு என் புருசன் கேட்குதா? கள்ளக்காதலியை மகனுடன் சேர்த்து உயிரோடு எரித்த பெண் டாக்டர்! பதைபதைக்க வைக்கும் காரணம்!

பழிவாங்கும் நோக்கத்தில் பெண்னொருவரும் அவருடைய மகனும் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலத்தில் பரத்பூர் எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கு சீமா குப்தா என்ற பெண் வசித்து வருகிறார். இவருடைய கணவரின் பெயர் சுதீப் குப்தா. இருவரும் மருத்துவர்களாவர். 

இதனிடையே சுதீப் குப்தாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனிடையே இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். சில மாதங்கள் கழித்து இந்த விவகாரமானது சீமாவுக்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அவர் தன்னுடைய கணவரை கண்டித்துள்ளார். இருப்பினும் அவருடைய கணவர் தொடர்ந்து அந்த பெண்ணுடன் உறவு வைத்து கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். இதனிடையே இருவருக்கும் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி பரிசாக கொடுத்துள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த சீமா அவ்விருவரையும் கொன்றுவிட முடிவெடுத்துள்ளார். அதன்படி சம்பவத்தன்று தன் கணவரின் கள்ளக்காதலியின் குடியிருப்புக்கு சென்றுள்ளார். வீட்டில் இருவரும் இருப்பதை உறுதி செய்து கொண்ட சீமா, அவர்கள் தப்பிக்காமல் இருப்பதற்காக வீட்டை வெளியே பூட்டியுள்ளார். பூட்டிய பிறகு வீட்டிற்கு நெருப்பு வைத்து எரித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணும் அவருடைய மகனும் வீட்டிற்குள்ளேயே கருகி உயிரிழந்தனர். சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் சீமா, சுதீப் மற்றும் அவருடைய தாயாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.