ஒரே நேரத்தில் ஒரே குடும்பத்தின் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட வீடு..! துணிச்சலாக குடியேறும் டாக்டர் குடும்பம்..! திகிலூட்டும் காரணம்..!

11 பேர் தற்கொலை செய்துகொண்ட வீட்டில் மருத்துவர் ஒருவர் குடியேறிய சம்பவமானது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதியன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் டெல்லியில் தற்கொலை செய்து கொண்டனர். அந்த வீட்டின் ஒரு அறையில் நாராயணி தேவி என்ற 75 வயது மூதாட்டி உயிரிழந்தார். அவருடைய மகன்களான லலித்(45), புவனேஷ்(50) அவர்களுடைய மனைவிகளான டீனா(42), சவிதா(48) ஆகியோரும் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளான நிதி (25), மேனகா(23) துருவ் (15), சிவம் (15) ஆகியோர் மற்றொரு அறையிலும் சடலமாக கிடந்தனர்.

மற்றொரு அறையில் நாராயணி தேதியை மகளான பிரதீபா(57) மற்றும் அவருடைய மகளான பிரியங்கா (33) ஆகியோர் நாராயணிதேவி அறையில் தற்கொலை செய்து கொண்டனர். இந்த வீட்டின்‌ உரிமையாளரான தினேஷ் சிங், "நிகழ்ந்த முக்கிய நிகழ்வுக்கு பிறகு யாரும் வீட்டை வாங்கிக்கொள்ள ஏறவில்லை.

பலரும் வியாபார நோக்கத்திற்காகவும், வசிப்பதற்காகவும் முன்வந்தனர். ஆனால் அவர்கள் மிகவும் குறுகிய நாட்களிலேயே வீட்டை விட்டு வெளியேறினர். அக்கம்பக்கத்தினர் பேய் பிடித்திருப்பதாக கதைகளை வெளியிட்டுள்ளனர்" இந்நிலையில், இந்த வீட்டிற்கு மருத்துவர் ஒருவர் குடி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரிடம் கேட்டறிந்த போது, "எனக்கு பேய் மீது எந்தவித நம்பிக்கையும் இல்லை. இவ்வளவு பெரிய வீடு எனக்கு 25,000 ரூபாய்க்கு கிடைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.