இரவு தூங்காமல் பகலில் தூங்குபவர்களுக்கு உடலில் பல்வேறு அவயங்கள் பாதிப்படைகிறது. ஏனென்றால் ஒவ்வொரு அவயமும் முழு ஆற்றலுடன் இயங்குவதற்கு என ஒரு நேரம் உள்ளது. அந்த நேரத்தில் வேறு பணிகளை மேற்கொள்வதால், அவயங்கள் பழுதடைகின்றன.
நைட் ஷிப்ட் செல்பவர்களுக்கு உடல் அவயங்கள் ஏன் பாதிக்கிறது தெரியுமா? மருத்துவ எச்சரிக்கை ரிப்போர்ட்
குறிப்பாக மூச்சு வெப்ப மண்டலம், பித்தப்பை மற்றும் கல்லீரல் போன்றவை இரவு 9 மணி முதல் 3 மணி வரை ஆற்றலுடன் இயங்குகிறது. இந்த நேரத்தில் ஓய்வில் இருந்தால் மட்டுமே வெப்பத்தை சீர் செய்யும் வேலை நடைபெறும். இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை பித்தப்பை மற்றும் கல்லீரல் நேரம். இது இரத்தத்தை தூய்மைப்படுத்தும் நேரம்.
இந்த நேரத்தில் கல்லீரல் உச்சி முதல் பாதம் வரையில் உள்ள இரத்தங்களை தன்னிடம் வரவழைத்து அதில் உள்ள நச்சுக்களை முறிக்கும் . அப்படி முறிக்கப்பட்ட நச்சுக்களை ஒரு மில்லியன் வடிப்பான்களைக் கொண்டுள்ள சிறுநீரகம் நச்சுக்களை வடித்து சிறுநீர்ப்பைக்குள் தள்ளுகிறது. அதன்பிறகு பிரிக்கப்பட்ட நச்சுக்கள் அனைத்தும் சிறுநீர்ப்பை மூலம் வெளியேறுகிறது.
இந்த நேரத்தில் தூங்காமல் விழித்துக்கொண்டிருந்தால் கல்லீரலால் சிறப்பாக பணி செய்ய முடியாது. அதனால் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறாமல் ரத்தத்திலேயே தங்கிவிடுகிறது. அப்படி கழிவுகள் இரத்தத்திலேயே தங்கிவிடுவதால் நச்சு வெளியேறாத இந்த ரத்தம் செல்லும் இடமெல்லாம் பல்வேறு விதமான நோய்களை உருவாக்கிவிடுகிறது.