எம்.ஜி.ஆர். என்றால் திரைப்பட நடிகர் மட்டுமல்ல, ஒரு நல்ல நிர்வாகியும்கூட. அவர் காலத்தில் என்னவெல்லாம் நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள ஆசையா..?
எம்.ஜி.ஆர். செய்த சாதனைகள் எல்லாம் தெரியுமா?

1972– ம் ஆண்டு அக்டோபர் 8 – ம் தேதியன்று. பழைய) செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் பின்வருமாறு பேசினார்;
”அறிஞர் அண்ணாவின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றி கலைஞரின் தலைமையில் செயல்படும் தி.மு.க. ஆட்சியில் இலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன எனப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இது நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட அறஞர் அண்ணாவுக்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகாது. லஞ்சத்தை ஊழலையும் ஒழித்துச் சுத்தமான நல்லாட்சியை நடத்துவதுதான் அண்ணாவுக்குச் செய்கிற நன்றியாகும்; பெருமை ஆகும்.
கழகத் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கைப் பொதுமக்கள் முன்னால் சமர்பிக்க வேண்டும். கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது சொத்துக்கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு ஆரம்பபணியாய் இருக்கும்.
அறிஞர் அண்ணாவே கைவிடத் துணியாத மது விலக்குக் கொள்கையை கைவிட்டது, கலைஞர் அரசு அண்ணாவுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். அண்ணாவுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய துரோகமாகும்!” என்றுஎம்.ஜி.ஆர். முழக்கமிட்டார். லஞ்ச, ஊழல் இல்லாத ஆட்சி அமையவேண்டும் என்றஎம்.ஜி.ஆரின் எண்ணம்தான் அதிமுகவாக உருவெடுத்தது.
அண்ணாசாலையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடையில்மக்களுக்கு முன் பதவியேற்பு வைபவத்தை நிகழ்த்திபுதுமை செய்தார்.தன் ஆட்சி லஞ்ச லாவண்மயற்ற ஊழலற்ற ஆட்சியாக மக்களாட்சி புரியும் என மக்களுக்கு உறுதியளித்தார். அதனைகடைசிவரை காப்பாற்றவும் செய்தார்.
1977 முதல் 1987 வரைஎம்.ஜி.ஆர். ஆட்சி – மூன்று முறை வெற்றி. அறம் சார்ந்த அரசியல்அரங்கேறியது. குடும்ப அரசியல்கிடையாது
கட்சிக்காரர்கள்,நிர்வாகிகள், அமைச்சர்கள் கண்காணிக்கப்பட்டதால் அச்சத்துடன் இருந்தனர். பதவிபறிக்கப்படலாம்,என்பதால் தவறு செய்யப் பயந்தனர்.
அதிகாரிகளுக்கு முழுஅதிகாரம் இருந்தது. எவரேனும் ஆளுமை செலுத்த முயன்றால் – கார்டனுக்கு சொல்லிவிடுவோம்– என்றனர்.
ஒரு தவறு செய்தால் அதைதெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விட மாட்டேன் என்று சொல்லியதைப் போலவே தவறுசெய்தவர்களை தண்டித்தார்., பதவிகளில் இருந்து தூக்கினார்.
எம்.ஜி.ஆர்.ஆட்சிக்குப் பிறகு லஞ்சத்தில் பேரம் பேசுவது, பங்கு போடுவது, எல்லை பிரிப்பதுபோன்ற முறைகேடுகள் நிகழ்ந்தது கண்கூடு.
மக்கள் நலன்
நாடோடி மன்னன்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்திய மக்களாட்சியை, தனது ஆட்சியில்கொடுத்தார். தேச நலனைவிட மக்கள் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.‘நானே போடப்போறேன் சட்டம், நன்மை பயக்கும் திட்டம்’ என்று சொன்னதைப் போலவே,ஒவ்வொரு திட்டத்திலும் மக்கள் நலன் முன்னிறுத்தப்பட்டது.
பசிப்பிணியைஉணர்ந்தவர் எம்.ஜி.ஆர். அதனால் குழந்தைகள் யாரும் பசியால் வாடக்கூடாது என்றுசத்துணவுத் திட்டம் கொண்டுவந்தார். இந்த திட்டம்தான் தமிழகத்தின் கல்வித்தகுதியைவானளவுக்கு உயர்த்தியுள்ளது.
சத்துணவுத்திட்டத்தில்10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயாக்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதனால்ஆயிரக்கணக்கான குடும்பத்தில் வறுமை விலகியது.
- ரேஷன்கடைகளில் அரிசி விற்பனையை சீர்படுத்தினார். அரிசி விலையை 1.75 ரூபாய்க்குகட்டுப்படுத்தினார். ரேசன் கடையில் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதை உணர்ந்தஎம்.ஜி.ஆர். தமிழ்நாடெங்கும் 20 ஆயிரம் ரேஷன் கடைகளைத் திறந்து 20,000 பேருக்குவேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். அதனால்தான் என்றென்றும் ஏழைகள் இதயத்தில் எம்.ஜி.ஆர்.வாழ்ந்தார்.
ஒரு விளக்குத் திட்டம்எம்.ஜி.ஆரால் கொண்டுவரப்பட்டது. குடிசையில் வாழும் மக்களும் மின்சாரம் பெறவேண்டும்என்பதற்காக ஒவ்வொரு குடிசைக்கும் ஒரு இலவச மின்சார விளக்கு பொருத்துவதைலட்சியமாகக் கொண்டு செயல்பட்டார். இதுவே பின்னர் இருவிளக்கு திட்டமாக மாற்றம்அடைந்தது.
பள்ளிமாணவர்களுக்கு படிப்பில் எந்த சிரமமும் ஏற்படக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர்.உறுதியாக இருந்தார். அதனால் இலவச சீருடை, இலவச பாடப்புத்தகம், இலவச காலனி,இலவசபற்பொடி என்று ஏகப்பட்ட உதவிகள் செய்து படிக்கவைப்பதில் அக்கறை செலுத்தினார்.
முதியோர் மீதுஎம்.ஜி.ஆருக்கு உள்ள அக்கறை அளப்பரியது. அதனால் முதியோருக்கு நாள்தோறும் மதியஉணவு, ஆண்டுக்கு இரண்டு முறை இலவச உடை, மாத உதவித்தொகை போன்றவற்றை வழங்கி, ஒவ்வொருவீட்டுக்கும் தலைமகனாக எம்.ஜி.ஆர். விளங்கினார்.
விவசாயிகள்,நெசவாளர்களுக்கு கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம், பயிர் பாதுகாப்பு, விதை மானியம்போன்றவையும் புரட்சித்தலைவரால் அறிமுகம் செய்யப்பட்டது.
படித்து வேலையில்லாதஇளைஞருக்கு ஊக்கத்தொகை எம்.ஜி.ஆர். காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. வீட்டுக்குஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்பதை எம்.ஜி.ஆர். லட்சியமாகக்கொண்டிருந்தார். இதற்காகவே மாதம் 9,000 வருமானத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்று சட்டம் போட்டார். ஆனால், இதற்கு கடுமையாக எதிர்ப்புதோன்றவே, மக்கள் உணர்வுகளுக்கு மதிப்புகொடுத்து சட்டத்தை வாபஸ் பெற்றார்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு31% என்ற அளவில் இருந்த இட ஒதுக்கீட்டை 50% என உயர்த்தியவர் புரட்சித்தலைவர். இடஒதுக்கீடு 50%க்குள் இருக்க வேண்டும் என்று வரையறை செய்திருந்தபோதும், மக்கள் தொகைகணக்கிட்டு 50% பிற்படுத்தப்பட்டோர், 18% தாழ்த்தப்பட்டோர் என 68% இட ஒதுக்கீடுகொண்டுவர காரணமாக இருந்தார். இதனை பின்னர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம்இயற்றி சட்டபூர்வமாகக் கொண்டுவந்தார்.
மக்கள் மனம் அறிந்தவர்
எம்.ஜி.ஆர். காலத்தில்41 கிளாஸ் என்ற சந்தேக கேஸ் போடும் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது. அதன்படிசைக்கிளில் டபுள்ஸ் செல்பவர்களை மடக்கி கை ரேகை பதிந்து, ரிமாண்ட் செய்துவந்தனர்.இதனால் கிராமத்து ஏழைகள்தான் பாதிக்கப்பட்டனர். கணவனுடன் மனைவி சைக்கிளில் செல்ல முடியவில்லை,அப்பாவுடன் மகன் சைக்கிளில் செல்ல முடியவில்லை. இந்த சட்டத்தை நீக்கினார்புரட்சித்தலைவர். இதனால் ஏழைகளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் வடிக்கவேமுடியாது.
தமிழர்நலன் பாராட்டுவதில் எம்.ஜி.ஆரை எவரும் விஞ்சமுடியாது. ஈழத்தில் விடுதலைப்புலிகள்வலிமை பெறவும், வளர்ச்சி அடையவும் எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் ஏராளம். அதனால்தான்உலகமெங்கும் இருக்கும் ஈழத்தமிழர்கள் வீட்டில் இன்றும் எம்.ஜி.ஆர். படம்தொங்குகிறது. பிரபாகரனுக்குக் கொடுக்கும் மரியாதையை எம்.ஜி.ஆருக்குக் கொடுத்தனர்.தமிழ் ஈழம் உருவாகவேண்டும் என்பதற்காக எதையும் செய்துகொடுக்கும் துணிச்சல்காரராகஎம்.ஜி.ஆர். இருந்தார்.
காரியம் சாதிப்பதில் வல்லவர்
பல அரசுகளால்பேசப்பட்டுவந்த கிருஷ்ணா நதிநீர் இணைப்பை சாத்தியமாக்கியவர் எம்.ஜி.ஆர்.சாதுர்யமாக என்.டி.ராமாராவுடன் பேசி ஒப்பந்தம் போட்டு காரியம் சாதித்தார்.
ரேஷன் அரிசி தருவதில்மத்திய அரசு சுணக்கம் காட்டுவது தெரிந்ததும் 1983-ம் ஆண்டு மெரினா பீச்சில்உண்ணாவிரதம் இருந்து காரியத்தை சாதித்தார்.
விமர்சனங்களை மதிப்பவர்
மதுவை தமிழகத்தில்இருந்து ஒழித்துக்கட்ட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கடுமையான சட்டங்களைக்கொண்டுவந்தார் முதல் முறை மதுவிலக்கு சட்டத்தில் பிடிபட்டால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை… இரண்டாவது முறை பிடிபட்டால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, மூன்றாவது முறைபிடிபட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என்று அவசர சட்டம் கொண்டுவந்தார். ஆனால்மக்களும் எதிர்க்கட்சிகளும் இந்த சட்டத்தைக் கடுமையாக எதிர்த்ததால் மதுவிலக்கைரத்து செய்தார்.
தனியார்களுக்கு கல்லூரிவழங்கியபோது கடுமையான விமர்சனம் எழுந்தது. ஆனால் எதிர்காலத்தில் தமிழர் நலனுக்குஇதுதான் சரியான திட்டம் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் தீர்க்கதரிசனம் இன்றுஉண்மையாகிவிட்டது. உலகம் முழுவதும் ஐ.டி. துறையில் தமிழர்கள் சாதனை புரிந்துவெற்றிகரமாகத் திகழ்வதற்குக் காரணம் இந்த தனியார் பொறியியல் கல்லூரிகள்தான்.