கர்ப்பிணிகளை ஏன் சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும் தெரியுமா?

கர்ப்பமாக இருக்கும்போது அல்லது பிரசவத்திற்கு பிறகான காலத்தில் ஒருசில கர்ப்பிணிக்கு மனநல பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. மனநல பாதிப்பு என்றதும் பெரிதாக நினைத்து அச்சப்பட வேண்டியதில்லை. கவலை, மன அழுத்தம், மன இறுக்கம், பதட்டம் போன்ற சிக்கல்களுக்கு ஆளாவதும் மனநல பிரச்னையாகவே பார்க்கப்படுகிறது.


• கர்ப்பிணிக்கு மனநலத்தில் மாற்றம் தென்படுகிறது என்றால் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

• இந்த பிரச்னையால் கர்ப்பிணியின் உடல்நலம் மட்டுமின்றி வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலனும் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

• கர்ப்பிணி மற்றும் குழந்தை மட்டுமின்றி கணவன், வீட்டில் இருக்கும் மற்ற உறவினர்களுக்கும் இந்த பிரச்னையால் பாதிப்பு நேரிடவும் வாய்ப்பு உண்டு.

• எளிதில் உணர்ச்சி வசப்படும் பெண்களுக்கும், அதிகமாக கவலைப்படும் பெண்களுக்கும் எளிதில் மன அழுத்தம் தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டு.

அதனால் கர்ப்ப காலம் முழுவதும் பெண்கள் மிகவும் சந்தோஷமான மனநிலையில் இருக்கவேண்டியது அவசியம். முதல் மூன்று மாதங்களில் அதிகமாக உணர்ச்சிவசப்படும் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இந்த மனநல குறைபாடு குறித்து தொடர்ந்து விரிவாக பார்க்கலாம்.