தி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..? அவரே வெளியிட்ட ரகசியம்.

கருணாநிதி இருந்த காலத்தில் குஷ்புக்கு திடீரென அரசியல் ஆசை வரவே, தி.மு.கவில் இணைந்தார். அவருக்கு பரபரப்பான வரவேற்பு கிடைத்தது. ஆனால், குஷ்புவின் வரவால் ஸ்டாலினுக்கு கட்சியில் மதிப்பும் மரியாதையும் குறைந்தது. அதனால், குஷ்புக்கு கட்சியில் மதிப்பும் மரியாதையும் குறைக்கப்பட்டது. அதனாலே கட்சியில் இருந்து வெளியே போனதாக சொல்லப்பட்டு வந்தது.


இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அருமனை வட்டார இந்து சமுதாயம் சார்பில் நடந்த பொங்கல் விழாவில், தான் ஏன் தி.மு.க.வில் இருந்து வெளியே வந்தேன் என்பதை குஷ்பு கூறியிருக்கிறார். நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் என்ன தெரியுமா? குஷ்பு பேசியது இதுதான்.

‘‘தி.மு.க ஆட்சியில பெண்களுக்கு பாதுகாப்பு இருந்ததுன்னு சொல்லிக்கிறாங்க. மு.க ஸ்டாலினுக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். இதே தி.மு.க-வில நான் இருக்கும்போது திருச்சியில ஒரு நிகழ்ச்சிக்காக போயிருந்தோன். எட்டு வயது, பத்து வயது ரெண்டு பெண் குழந்தைகளை தனியா விட்டுட்டு போனேன். என் கணவர் ஹைதராபாத்தில இருந்தார். காலையில திருச்சிபோயிட்டு மாலையில சென்னை போயிடுவேன்னு நம்பி போனேன். நான் திருச்சியில இருக்கும்போது என் விட்டுல கல்லெறிஞ்சாங்க. அம்மா பயமா இருக்குன்னு பசங்க போன் பண்ணி கதறினாங்க. 

ஒரு தாய்ங்கிற முறையில பதறிப்போய் ஸ்டாலின பார்க்கப்போனேன். ஐயா சாப்பிட்டுட்டு இருக்காங்க இப்ப பார்க்க முடியாதுன்னு சொன்னாங்க. உங்க கட்சி தொண்டர் வீட்டுல கல் வீசுறாங்க, வீட்டுல ரெண்டு பசங்க இருக்காங்க, எனக்கு பயமா இருக்குன்னு கதறி அழுதிட்டு இருக்கேன் நான். ஸ்டாலின் பார்க்கவே இல்ல. அப்பத்தான் வீட்டுல கல் வீசச் சொன்னதே ஸ்டாலின்தான்னு எனக்கு தெரிஞ்சது‘‘ என்று கூறியிருக்கிறார்.

குஷ்பு இது குறித்து வெளிப்படையாகப் பேசிய பிறகும், ஸ்டாலின் அமைதி காப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.