பொதுவாக மலை பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடிய இஞ்சி, உலகமெங்கும் மருத்துவப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. தமிழர்களின் அன்றாட உணவில் இஞ்சி சேர்த்து பயன்பெற்று வருகிறார்கள்.
இஞ்சி டீ குடித்தால் என்னவெல்லாம் நன்மை தெரியுமா?
பாட்டி வைத்தியத்திலும் வீட்டு வைத்தியத்திலும் இஞ்சிக்கு நிரம்பவே பங்கு உண்டு. ஆங்கில மருத்துவத்திலும் இஞ்சியில் இருந்து ஏராளமான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
·
மயக்கம், தலைசுற்றல் போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு இஞ்சி சாறு விரைந்து பயன் அளிக்கிறது.
·
நரம்புகளை பலப்படுத்தும் தன்மையுடைய இஞ்சி, ரத்தக் கட்டிகள் ஏற்படாமலும் தடுக்கிறது.
·
சாதாரண காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற பிரச்னைகளை தீர்ப்பதற்கும் இஞ்சி பயன்படுகிறது.
·
ஏப்பம், வயிறு உப்புசம், வயிற்றுப் பொருமல், அஜீரணம் போன்ற பிரச்னைகளுக்கு உடனடி நிவாரணம் தருகிறது இஞ்சி.
இஞ்சியை பொடி செய்து இஞ்சி டீ குடித்துவரலாம். அதுபோல் இஞ்சி சர்பத், இஞ்சி லேகியம் போன்றவை சாப்பிட்டும் உடல் ஆரோக்கியம் பெறலாம்.