புளியிலும் மருத்துவக் குணம் இருக்குதுன்னு தெரியுமா??

ரோடுகளில் புளிய மரங்களை நிறையவே பார்த்திருப்போம், பழத்தைப் பறித்து ருசித்திருப்போம். அதேபோல் வீடுகளில் எப்போதும் புளி இருக்கவே செய்யும். இதில் இருக்கும் மருத்துவகுணம் தெரியுமா?


·         புளியில் கால்சியம், வைட்டமின்பி’, பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வளர்சிதை மாற்றத்துக்கு உதவிபுரிகிறது.  

·         புளியம் பூக்களை துவையலாக அரைத்து உண்டால் மயக்கம், தலைச்சுற்றல் தீரும். புளிய மரப்பட்டை தோல் நோய்களுக்கு மிகவும் நல்லது.

புளியில் இருக்கும் டார்டாரிக் அமிலம் தீங்கு விளைவிக்கும் நோய்க் கிருமிகளிடம் இருந்து உடலை காக்கும். அத்துடன் மலச்சிக்கலையும் கொழுப்பையும் கட்டுப்படுத்தும் தன்மை புளிக்கு உண்டு.