ரூ.4.20 கோடிக்கு ஏலம் போன நிக்கோலஸ் பூரண் யார் தெரியுமா?

ஐ.பி.எல் ஏலத்தில் ரூ.4.20 கோடிக்கு ஏலம் போன நிக்கோலஸ் பூரண் (Nicolas Pooran) யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது-


  மேற்கிந்திய தீவுகளின் டிரினிடாட் அன்ட் டொபகோ நாட்டைச் சேர்ந்தவர் நிக்கோலஸ் பூரண். இடது கை ஆட்டக்காரரான இவர் விக்கெட் கீப்பராகவும் செயல்படுபவர். 2016ம் ஆண்டு முதல் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக நிக்கோலஸ் பூரண் விளையாடி வருகிறார். இதுவரை 5 சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் பூரண் விளையாடியுள்ளார்.

  இதில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே பூரண் அடித்துள்ளார். அந்த  அரை சதமும் இந்திய அணிக்காக இந்தியாவில் விளையாடிய போது எடுத்தது. 25 பந்துகளில் பூரண் அடித்த 53 ரன்கள் அவரது அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்தியது- இதற்கு முன்பு முதல் தர கிரிக்கெட் போட்டியிலும் இதே போன்றதொரு அரை சதத்தை பூரண் அடித்துள்ளார்.

கரீபியன் பிரிமீயல் லீக்கில் மிக இளம் வயதில் அதாவது வெறும் 17 வயதில் விளையாடியுள்ள பூரண், ரெட் ஸ்டீல் அணிக்காக கயானா அணிக்கு எதிராக 24 பந்துகளில் 54 ரன்கள் விளாசினார். இதில் ஆறு அபாரமான சிக்சர்களும் அடங்கும். மேலும் விக்கெட் கீப்பராகவும் பூரண் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியிலும் விளையாடியுள்ள பூரண், உலக கோப்பையில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக அரை சதம் அடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணியில் அண்மையில் நடந்து முடிந்த 20 ஓவர் தொடரில் 25 பந்துகளில் பூரண் விளாசிய அரை சதம் தான் தற்போது அவருக்கு ஐ.பி.எல் வாய்ப்பை பெற்றுத்தந்துள்ளது.

 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை எதிர்பார்த்து காத்திருந்த பல அணிகளும் நிக்கோலஸ் பூரணை வாங்க பெரும்பாலான அணிகள் போட்டியிட்டன. இதனால் 75 லட்சம் ரூபாய் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்ட பூரணை, இறுதியில் பஞ்சாப் அணி 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

  சர்வதேச போட்டியில் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ள பூரணுக்கு ஜாக்பாட்டாக 4 கோடியே 20 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.