புதினா பல்பொடி தெரியுமா? ஈசியா செய்யுங்க!! ஆரோக்கியமா வாழுங்க!

செடி வகையைச் சேர்ந்த புதினாவில் நீர்ச்சச்த்து, கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, உலோகச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிரம்பி காணப்படுகின்றன.


புதினாவை சட்னியாக, ஜூஸாக, துவையலாக எப்படி சாப்பிட்டாலும் இதன் சத்துக்கள் குறைவதில்லை. அதனால் இதனை மருத்துவ மூலிகை என்கிறார்கள்.

·         புதினாவை துவையல் செய்து சாதத்துடன் சாப்பிட்டுவர வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, ஜீரணக் கோளாறு போன்றவை அகலும்.

·         கொழுப்பை குறைத்து ரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை இருப்பதால் இதயம் சிறப்பாக செயல்பட உதவுகிறது புதினா.

·         பித்தத்தை தணித்து, வறட்டு இருமலை சரிசெய்யும் தன்மையும் வாய்ப் புண்ணை குணப்படுத்தும் குணமும் புதினாவிற்கு உண்டு.

·         பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி, தலைசுற்றல் போன்ற பிரச்னையை கட்டுப்படுத்தும் தன்மை புதினாவிற்கு உண்டு.

புதினாவை காயவைத்து அத்துடன் உப்பு சேர்த்து பல்பொடி போன்று பயன்படுத்தினால் பற்கள் வெண்மையாக மாறும், ஈறுகள் பலம் பெறும் அத்துடன் வாய் துர்நாற்றமும் தீரும்.