சாமியே ஸ்டாலின் ஐயப்பா! வைரலாகும் மலைக்கு மாலை போட்ட கலைஞர் குடும்ப புகைப்படம்!

கிருஷ்ணர் மீது பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததற்கு வழக்குப் போடவேண்டும் என்று கி.வீரமணி பேசிய பேச்சு, இப்போது தமிழகமெங்கும் பற்றி எரிந்துவருகிறது.


திரும்பிய பக்கமெல்லாம் இந்துக்களை ஒன்றுபடுத்தி, தி.மு.க.வுக்கு எதிராக ஓட்டு போட வைக்க ஆர்.எஸ்.எஸ். கும்பல் தீவிரமாக முயன்று வருகிறது. இப்போது வீரமணி எங்கேயும் தேர்தல் பிரசாரம் செய்யவேண்டாம் என்று ஸ்டாலின் சொல்லிவிட்டார். இதுதவிர, தி.மு.க. எப்போதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை என்றும் சொல்லிவிட்டார். ஆனாலும், மக்கள் கூட்டம் அடங்குவதாக இல்லை.

இந்த நிலையில் ஸ்டாலின் ஐயப்ப பக்தர் போன்று நிற்கும் ஒரு படத்தை அ.தி.மு.க. ஐ.டி. விங்க் அதிரடியாக பரப்பி வருகின்றனர். அந்தப் படத்தில் ஸ்டாலின் மட்டுமின்றி கருணாநிதி, ஆற்காடு வீராசாமி, டி.ஆர்.பாலு, இளங்கோவன் போன்றவர்களும் ஐயப்ப மலைக்குச் செல்லும் வகையில் மாலை போட்டிருக்கிறார்கள்.

இந்தப் புகைப்படத்தை பரப்பி பொய்யான வேடதாரிகள் என்று அ.தி.மு.க. பரப்பிவருகிறது. ஆனால், இதைப் பார்த்து, ஸ்டாலின் எப்போ ஐயப்பன் கோயிலுக்குப் போச்சு என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் அ.தி.மு.க.வை அலற வைத்திருக்கிறது.