கேப்டன் - ஓபிஎஸ் டீல் ஓவர்! அமாவாசை மீட்டிங்கில் மோடியுடன் பங்கேற்கிறார் பிரேமலதா!

கேப்டன் ஆலோசனை


ஒருவழியாக தி.மு.க. கூட்டணி முடிவாகிவிட்டது. ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் இன்னமும் இழுபறி நிலையில் இருக்கிறார் விஜயகாந்த். இன்று காலை நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி இன்று கோயம்பேட்டில் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். வழக்கம்போல் எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் கலைந்தது.

நேற்று ஒ.பன்னிர்செல்வம் வந்து சந்தித்தப்போதும், ‘பா.ம.க.வுக்கு இணையாக எண்ணிக்கை வேண்டும் என்று கேட்கப்பட்டதாம். அதனால் 4 தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்படும் என்ற நிலையில் இருந்து கூடுதலாக ஒரு சீட் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதாவது, 5 நாடாளுமன்றத் தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா தொகுதி என்று பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.

அப்படியென்றால் சட்டசபை இடைத்தேர்தலில் 2 தொகுதிகள் கொடுங்கள் என்று கேட்ட தே.மு.தி.க.வின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தொகுதியை விட்டுத்தரக்கூடாது என்று அ.தி.மு.க.வில் கடும் எதிர்ப்பு உள்ள நிலையில், இந்த ஏற்பாடுக்கு ஓரளவு விஜயகாந்த் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றே தெரிகிறது.

அதனால் நாளை அமாவாசை தினத்தில் ஒப்பந்தம் போட்டு, மோடி கூட்டத்தில் கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

பாட்டாளி மக்கள் கட்சிக்கும் தே.மு.தி.கவுக்கும் கடுமையான மோதல் இருப்பதால், உள்ளடி வேலை சிறப்பாக நடக்கும். அதனால் இரண்டு கட்சிகளும் நிற்கும் தொகுதிகள் எல்லாமே வெற்றித் தொகுதிகள் என்று தி.மு.க. இப்போதே கணித்து வைத்திருக்கிறது.

பார்க்கலாம்.