பிரபல திரையுலக பாடகியான சித்ரா அவர்கள் தன் மகளின் இறப்பு குறித்து பல சுவாரசியமான கருத்துக்களை கூறியிருப்பது வைரலாகி வருகிறது.
துபாயில் மர்மமான முறையில் உயிரிழந்த மகள்! போலீசிடம் இருந்து நூலிழையில் தப்பிய பாடகி சித்ரா!

இந்திய திரையுலகில் "சின்னக்குயில்" என்று தன்னுடைய குரல் இனிமைக்காக அழைக்கப்பட்டவர் சித்ரா. இவர் கிட்டத்தட்ட 1000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருடைய மகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இறந்து போனார். சமீபத்தில் தன் மகள் இறந்தது குறித்து சித்ரா அளித்த பேட்டியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் சித்ரா கூறியதாவது:
என்னுடைய மகள் பிறப்பு மற்றும் இறப்பு இரண்டுமே கடவுள் ஸ்பரிசத்தால் ஏற்பட்டதாக கருதுகிறேன். நீண்ட காலமாக பிள்ளை வரம் என்று புட்டபர்த்தி சாய் பாபாவிடம் குழந்தை வரம் அருளுமாறு சென்றிருந்தேன். அப்போது அவர், அடுத்த முறை நீ இங்கு வரும்போது குழந்தையுடன் வருவாய் என்று அருளினார். அவர் கூறியவாறே எனக்கு விரைவிலேயே குழந்தை பிறந்தது. மேலும் கிருஷ்ணர் இறந்த நாளன்று, என்னுடைய மகள் இறந்து போனார்.
நான் பாடிய பாடல் தொகுப்பில் "மஞ்சாடி" என்ற தொகுப்பு அவளுக்கு மிகவும் பிடிக்கும். துபாய் சென்றிருந்தபோது எங்களுடைய அறையில் அவள் அதை காணொளியாக கேட்டு கொண்டிருந்தாள். நான் அப்போது குளிக்கச்சென்றேன். பாட்டு கேட்டுக் கொண்டிருந்த போது ஏன் என் மகளுக்கு நீச்சல் குளத்தை பற்றிய சிந்தனை வரவேண்டும்??.
அறையின் கதவை திறந்து கொண்டு அவளால் அவ்வளவு தூரம் எவ்வாறு செல்ல முடியும்??. நீச்சல் குளத்தில் போடப்பட்டிருந்த இரும்பு கதவை திறந்து அவளால் எவ்வாறு உள்ளே செல்ல முடியும்?? என்ற கேள்விகளுக்கு இன்று வரை எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை.
துபாய் காவல்துறையினர் எங்களுடைய மகளின் கால்தடங்கள் நீச்சல் குளத்தின் வாயில் வரை இடம்பெற்று வந்ததாக கூறினர். ஆனால் அந்த கால்தடங்கள் உடனடியாக மறைந்ததாகவும் கூறினர்.இவற்றின் மூலமே என்னுடைய மகளின் பிறப்பும் இறப்பும் கடவுள் ஸ்பரிசம் நிறைந்ததாகவே இருந்துள்ளதாக கருதுகிறேன்" என்று கூறினார்.
இவருடைய பேட்டியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.