தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..! சிவப்பு எச்சரிக்கை..! இனி எல்லாம் மக்கள் கையில் தான்..!

பாதிப்பு அடிப்படையில் தமிழகத்தில் 34 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 1,14,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 18,50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்தியா முழுவதிலும் 8,447  பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 765 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 273 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 1072 பேர் இந்த வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 50 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் வசிக்கும் மக்களின் அலட்சியத்தால் நாளுக்கு நாள் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், மக்கள் இதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இதனால்தான் நோய் பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அளவில் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னை, கோவை, ஈரோடு, நெல்லை, திண்டுக்கல், நாமக்கல், செங்கல்பட்டு, தேனி, திருச்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவள்ளூர், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நாகை, கரூர், விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக சிவப்பு நிற மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர், கடலூர், கன்னியாகுமரி, சேலம், திருவாரூர், விருதுநகர், தஞ்சை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 9 மாவட்டங்கள் ஆரஞ்சு வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இறுதியாக நீலகிரி, காஞ்சிபுரம், சிவகங்கை, தென்காசி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் மஞ்சள் நிற மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

20 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் சிவப்பு நிறங்களில் வருவதாகவும், 10 முதல் 20 பேர் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் ஆரஞ்சு நிற மாவட்டங்களாகவும், 10 பேருக்கு உட்பட்டு பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், மஞ்சள் நிற மாவட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

எனினும் இந்த நிறங்களுக்கு தமிழக அரசு இன்னும் முறையாக விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.