புது மனைவியுடன் பைக்கில் அசுர வேகம்..! திடீரென குறுக்கே வந்த நாய்..! நொடியில் சடலமான திரைப்பட இயக்குனர்!

இளம் இயக்குனரான விவேக் ஆர்யன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் சினிமா துறையில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


மலையாளத் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வரும் ஜீத்து ஜோசப் உடன் இணைந்து துணை இயக்குனராக பணியாற்றியவர் விவேக் ஆர்யன். கடந்த ஆண்டு இவரது இயக்கத்தில் "ஓர்மையில் ஒரு சிஷ்ரம்" என்ற திரைப்படம் வெளியானது. இதன் மூலம் இயக்குனராக திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் அமிர்தா என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார்.

இயக்குனர் விவேக் ஆர்யன் மற்றும் அவரது மனைவி அமிர்தா ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். சாலையில் எதிர்பாராதவிதமாக குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக விவேக் ஆரியன் தன்னுடைய இருசக்கர வாகனத்தை திருப்ப முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர்.

கீழே விழுந்த அதிர்ச்சியில் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் கொச்சியில் இருந்த பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இயக்குனர் விவேக் ஆர்யன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்ததால் அவரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இயக்குநர் விவேக் ஆர்யன் பரிதாபமாக நேற்றைய தினம் உயிரிழந்தார். இந்த சம்பவம் சினிமா துறையினர் மற்றும் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.