கொல்கத்தா டீமில் முதுகில் குத்துபவர்கள் இருக்கிறார்கள்! தினேஷ் கார்த்திக் அதிர்ச்சி தகவல்!

இரண்டு முறை ஐபிஎல் தொடர் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர், இந்த தொடரிலும் அற்புதமாக தொடங்கினர்.


ஆனால் எதிர்பாராத விதமாக தொடர்ந்து ஆறு போட்டிகளில் தோற்றனர். தற்போது அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது மிகவும் கடினமாகியுள்ளது. இந்நிலையில் அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் தன்னுடைய கேப்டன்ஷிப்பில் ஏற்படும் நெருக்கடிகள் பற்றி ஒரு பேட்டி அளித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது.

முதலில் பேட் செய்த நைட் ரைடர்ஸ் அணியினர் பட்டைய கிளப்பினர். 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 232 ரண்கள் குவித்தனர். அதிகபட்சமாக ஆண்ட்ரே ரஸ்செல் 80 ரண்களும், ஷுப்மண் கில் 76 ரண்களும் குவித்தனர். கடினமான இலக்கை நோக்கி ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியினர் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

பின்னர் ஹர்திக் பாண்டியா ருத்ரதாண்டவம் எடுத்தார். 34 பந்துகளில் 91 ரண்கள் விளாசினார். மொத்தம் 9 சிக்சர்களை பறக்க விட்டார். இருப்பினும் 198 ரண்களே எடுக்க முடிந்தது. 34 ரண்களில் கொல்கத்தா அணி வென்றது. பிறகு செய்தியாளர் சந்திப்பில் தினேஷ் கார்த்திக் தன்னுடைய பொறுப்பு பற்றி பேசினார்.

தன்னுடைய கேப்டன்ஷிப் பற்றி நிறைய பேர் பின்னால் பேசுவது தெரியும் என்றும், அதனை பெரிதாக பொருட்படுத்துவதில்லை என்றார்.இது ஒரு பெரிய தொடர் என்றும், இது போன்று நடப்பது புதிதல்ல என்றும் கூறினார். மேலும் ஆண்ட்ரே ரஸ்செல் மிகப்பெரிய விளையாட்டு வீரர் என்றும், விளைமதிப்பில்லா வீரர் என்றும் புகழ்ந்து பேட்டியளித்தார்.