காரைக்குடி காளை அணியை கதற வைத்த அஸ்வின் அணி ! புள்ளி பட்டியலிலும் நம்பர் 1!

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணியை அபாரமாக வென்று உள்ளது .


அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல்    டிராகன்ஸ் அணியும், ஸ்ரீகாந்த் அனிருதா  தலைமையிலான காரைக்குடி காளை அணியும் மோதின .

முதலில் பேட் செய்த காரைக்குடி   காளை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை எடுத்தது . காரைக்குடி  அணியின் கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருத்தா அபாரமாக விளையாடி 59 பந்துகளில் 98 ரன்கள் குவித்தார் . திண்டுக்கல் அணியின் ராமலிங்கம் ரோஹித்  சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார் .

பின்னர் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள்  தொடக்கம் முதலே காரைக்குடி காளை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது .திண்டுக்கல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹரி  நிஷாந்த் 81 ரன்களும் , ஜெகதீசன் 78 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் திண்டுக்கல் அணியை வெற்றி பெறச் செய்தனர் . இதனால் திண்டுக்கல்  அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணியை அபாரமாக வென்றது.

இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல்     டிராகன்ஸ் அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .