வேட்பாளருக்கு ரூ.10 கோடி! ரேட் பிக்ஸ் செய்த டிடிவி தினகரன்! அதிர்ச்சியில் நிர்வாகிகள்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை கட்சிக் கொடியேற்றி தொடங்கிவைத்த டி.டி.வி. தினகரன், வெள்ளிக் கிழமை இரவு 2 மணி வரைக்கும் நேர்காணல் நடத்தியிருக்கிறார்.


அ.தி.மு.க., தி.மு.க. தே.மு.தி.க. போன்ற அனைத்துக் கட்சிகளும் விருப்பமனு தாக்கல் செய்வதற்கு 25 ஆயிரம் ரூபாய் வசூல் செய்தன. இதனை கிண்டல் செய்தார் தினகரன். எங்கள் கட்சிக்கு பணம் வசூல் செய்யவேண்டிய அவசியம் இல்லை. அதனால் யாரிடமும் பணம் வாங்காமல் வேட்பாளர்களை அறிவிக்கப் போகிறேன் என்று தெரிவித்தார்.

இதைக் கேட்டு கட்சிக்காரர்கள் குஷியானார்கள். உடனே குவிந்திருந்த நிர்வாகிகளிடம், நாம இப்பவே நேர்காணல் ஆரம்பிச்சிடலாம் என்று சொல்லவும், சந்தோஷமாக குவிந்தார்கள்.

அதன்படி நேர்காணலைத் தொடங்கினார் தினகரன். வேட்பாளராகும் ஆசையுடன் முன்வந்தவர்களிடம் பெயர் என்ன, எந்தத் தொகுதி வேண்டும் என்றெல்லாம் கேட்காமல், எவ்வளவு பணம் வைச்சிருக்கீங்க என்று நேரடியாக கொக்கி போட்டாராம். 

என்ன சொல்வது என்று தெரியாமல் தயங்கிக்கொண்டு இருக்க, தேவையில்லாம உட்கார்ந்து நேரத்தை வீணாக்காதீங்க. எனக்கு ரெண்டு நாளைக்குள்ள 10 கோடி ரூபாய் செலவழிக்க முடியுங்கிறதுக்கு ஆதாரம் காட்டுங்க, கண்டிப்பா சீட் தர்றேன். நாமதான் ஜெயிக்கப் போறோம், இந்த  10 கோடி ரூபாயை நீங்க ஈசியா பார்த்துடலாம் என்றாராம்.

உடனே அலறியடித்து வெளியே வந்திருக்கிறார். அதன்பிறகு உள்ளே போன ஒவ்வொரு நபரிடமும் இது மட்டும்தான் பேசியிருக்கிறார்.

ஏன் இப்படி என்று கேட்டபோது, ‘எதிரே எடப்பாடி கடுமையாக செலவழிப்பார் என்பதால் கொஞ்சமாவது செலவழிக்க முடிந்தால்தான் வெற்றியைத் தொடமுடியும். அதனால்தான் பசையுள்ள ஆட்களைத் தேடுகிறார் தினகரன். பணத்தை அவருக்காக கேட்கலை, மக்களுக்கு குடுக்கத்தான் கேட்கிறார் என்று உருகினார்கள்.

ஆஹா... தினகரனுக்குத்தான் எத்தனை பெரிய மனசு..!