சிவனின் வடிவமே லிங்கம். இந்தியாவில் சிவனுக்கு உருவ வழிபாடு அதிகம் கிடையாது.
மர்மம்! அதிசயம்! அற்புத சிவ லிங்கங்கள்! தமிழ்நாட்டில் எங்கெங்கு உள்ளன தெரியுமா?
லிங்க வடிவமே. இந்த லிங்கங்களில் சில அதிசய தோற்றங்களும் வடுக்களும் மாறுபட்டும் அந்தந்த ஊர்களின் வரலாற்றுக்கேற்ப உள்ளன. அந்த வகையில் உள்ள சில அதிசய லிங்கங்களை பார்ப்போம்:
திருக்குறுக்கை: அட்ட வீரட்டதலங்களில் ஒன்று திருக்குறுக்கை. சிவன் காமனை எரித்த தலம் இது. சிவன் மீது காமன் தாமரைப்பூப் பாணம் விட்டான். எனவே சிவலிங்கத்தின் மீது தாமரைப்பூ தழும்பு உள்ளது.
கருவூர் பசுபதீஸ்வரர்: இது சுயம்பு லிங்கம். இங்கு இறைவனின் திருமேனி வடக்கு பக்கம் சற்று சாய்ந்து காட்சி தருகிறது. இறைவன் சாய்ந்து கருவூர்தேவருக்கு இடம் கொடுத்தார் என புராணம் கூறுகிறது.
திருப்புவனம்: மதுரை - இராமநாதபுரம் சாலையில் உள்ள ஊர் இது. இங்குள்ள பூவனநாதர் லிங்கத்தில் திரிசூலமும், சடைமுடியும் உள்ளன.
தேவிகாபுரம்: திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள போளூருக்கு அருகே உள்ள ஊர். இங்கு ஒரே சந்நிதியில் பொன்மலைநாதரோடு காசிவிஸ்வநாதரும் சேர்ந்து காட்சியளிக்கிறார்.
திருப்பரங்குன்றம்: இது முருகனுக்கு முதல்படைவீடு. இங்கு முருகனுக்கு அருகே துர்க்கை, விநாயகர், சிவன், திருமால் சந்நிதிகள் உள்ளன. சிவனுக்கு நேர் எதிரே பவளக்கனிவாய்ப் பெருமாள் சன்னிதி உள்ளது. சிவலிங்கத்தின் நேர் எதிரே சன்னிதி உள்ளது இங்கு தான்.
திருவெறும்பூர்: திருச்சிக்கு அருகிலுள்ள ஊர். இங்கு மலை மீது கோவில் இருக்கிறது. லிங்கத்தை எறும்பு மொய்த்ததாகக் கதை. எறும்பு மொய்த்தது போன்று லிங்கம் காட்சி தருகிறது.
திருவானைக்காவல்: இது திருச்சிக்கு அருகில் உள்ள ஊர். இங்குள்ள லிங்கத்தின் அடியில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும். இதனால் நீர் லிங்கம் என்று பெயர்.