அடேங்கப்பா இத்தனை ஜோசியம் இருக்கிறதா? ஒலியலை ஜோதிடம் இப்படித்தான்!

ஜோதிடம் என்பது ஒருவன் பிறந்த கணத்தில் இருந்த கோள்களின் நிலை மற்றும் விண்மீன்களின் அமைப்பினைக் கொண்டு கணக்கிடப்படுவதாகும்.


ஜோதிடம் என்பது மிக விரிவான பறந்து ஞானத்தை உள்ளடக்கியது. இது நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலையை அடிப்படையாகக் கொண்ட மிக சிக்கலான கணக்குகள் மற்றும், நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலைக்கும் மனித வாழ்வை உள்ளடக்கிய பூமியிலுள்ள நிகழ்வுகளுக்கும் இடையேயான தொடர்புகள் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கியது.

ஜோதிடம், பிரபஞ்சத்தின் சட்டங்கள் மற்றும் பிரபஞ்சம் ஏன் உள்ளது என்பது பற்றிய விளக்கங்களை தருவதில்லை. எளிய வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், ஜோதிடம், அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது என்று காட்டுகிறது. சுருக்கமாக, பிரபஞ்சம், ஒரு லயப்படி செயல்படுகிறது, மனித வாழ்க்கையும் அந்த லயத்தின் ஒரு அங்கமாக விளங்குகிறது.

ஜோதிடம் ஒரு பழமையான நடைமுறை. நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலை, மக்களின் மீதும் நிகழ்வுகளின் மீதும்நேரடியான பாதிப்பை ஏற்படுத்துவதாக அது கருதுகிறது. அதன்படி, ஒருவரின் பிறப்பின் போது உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலைக்கு ஏற்றவாறு ஒருவரின் வாழ்க்கைப் பயணம் தீர்மானிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதை சாதிக்க முயற்சிக்கும் விளக்கப்படமே ஜாதகம் என்று அழைக்கப்படுகிறது.

ராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக்கூறவும் உபயோகப்படுவது ஜோதிடம்.

ஜோதிடத்தில் வானசாஸ்திர ஜோதிடம், மாண்டேன் ஜோதிடம், ஜோதிடம், எண்ஜோதிடம், பிரசன்ன ஜோதிடம் (ஆருடம்), கைரேகை ஜோதிடம், ஒலி அலை ஜோதிடம், சாமுத்திரிக்கா லட்சண ஜோதிடம், கையெழுத்து ஜோதிடம், வாஸ்து சாஸ்திர ஜோதிடம் போன்ற பல பிரிவுகள் உள்ளன. அவற்றை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

வானசாஸ்திர ஜோதிடம் : வான் மண்டலத்தில் ஏற்படும் பல மாற்றங்களால் பூமியில் ஏற்படும் பருவநிலைகளின் மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் மற்றும் தட்பவெப்பநிலை மாற்றங்கள் போன்றவற்றை பற்றி அறிய உதவுகின்றது.

மாண்டேன் ஜோதிடம் : ஓர் நாட்டின் பொருளாதார நிலை, நாணய மதிப்பு, அரசியல் நிலை, ஏற்றுமதி, இறக்குமதியின் நிலை மற்றும் விலைவாசி கடன் போன்றவற்றை பற்றி அறிய பயன்படுத்தப்படுகின்றது.

ஜோதிடம் : ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகள், சூழ்நிலைகள் அவன் பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்படும் பல சம்பவங்களைப் பற்றி அறிய பயன்படுகிறது.

எண் ஜோதிடம் : ஒரு தனி மனிதனின் பிறந்த தேதிக்கு தகுந்தாற்போல் அவருடைய பெயரின் எழுத்துக்களை மாற்றி அமைப்பதன் மூலம் அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை பற்றி அறிய பயன்படுத்தப்படுகின்றது.

பிரசன்ன ஜோதிடம் : ஓர் நபர் வந்து ஜோதிடம் பார்க்கும் நேரத்தில், அந்த நேரத்தில் இருக்கும் கிரகநிலையை வைத்து அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை பற்றி அறிவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.

கைரேகை ஜோதிடம் : ஓர் தனி நபரின் கைரேகையை வைத்து அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி அறிய பயன்படுத்தப்படுகின்றது .

ஒலி அலை ஜோதிடம் : ஒருவரின் ஒலி அலைகளை மாற்றி அமைப்பதன் மூலம் அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி அறிய பயன்படுத்தப்படுகின்றது

சாமுத்திரிக்கா லட்சணம் : ஒருவரின் முகமைப்பு வைத்தும் , உடலமைப்பு வைத்தும் அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி அறிய பயன்படுத்தப்படுகின்றது.

கைஎழுத்து ஜோதிடம் : ஒருவர் எழுதும் கை எழுத்தை வைத்து அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி அறிய பயன்படுத்தப்படுகின்றது .

வாஸ்து சாஸ்திரம் : ஒருவர் வசிக்கும் வீட்டின் அளவுகளை வைத்து அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி அறிய பயன்படுத்தப்படுகின்றது .