சம்பளம் வேணும்னா படுக்க வா! 45 வயது துப்புரவு பெண்மணியை பாடாய் படுத்திய அதிகாரிகள்! பிறகு நேர்ந்த விபரீதம்!

சம்பளத்தை கொடுக்காமல் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததால் மனமுடைந்த துப்புரவு பணிப்பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொள்ள முயன்ற சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள களியக்காவிளை என்னும் பகுதியில் தினக்கூலி ஒப்பந்தத்தில் 13 பேர் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மீனச்சல் என்னும் பகுதியிலிருந்து ராஜன் என்பவர் பணிபுரிகிறார். இவருடைய வயது 44. இவர் பேரூராட்சிக்கு உட்பட்ட காய்கறி சந்தைகளில் பேருந்துகளும் ஆகிய இடங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

களியக்காவிளை பேருந்து நிலையத்தின் ஒப்பந்ததாரர்களாக ராமதாஸ் மற்றும் சந்திரன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் ராஜத்திடம் கழிவறைகளை சுத்தம் செய்வதற்கு தினமும் ரூபாய் 25 தருவதாக பேசியுள்ளனர். 

ஆனால் இவர்கள் அவருக்கு சம்பளம் தராமல் மூன்று மாதங்கள் அலைக்கழித்துள்ளனர். மேலும், ராஜத்திடம் பலமுறை தவறான முறையில் ஈடுபட்டுள்ளனர். அவரை பாலியல் பலாத்காரம் செய்ய இருவரும் பலமுறை முயன்றுள்ளனர். இதைப்பற்றி ராஜம் பலமுறை பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த பயனுமில்லாமல் போனது.

மூன்று மாதங்களாக சம்பளம் தராததால் ராஜம் மிகவும் உடல் நலிவுற்றார். சம்பளம் இல்லாதது, பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டது ஆகியவற்றால் ராஜம் மிகவும் மனமுடைந்தார். திடீரென்று இன்று காலை பேரூராட்சி அலுவலகத்தின் முன்னர் விஷம் குடித்து, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்த சக பணியாளர்கள் அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் இந்த சம்பவத்தை, களியங்காவிளை காவல்துறையினரிடம் தெரிவித்தனர் அவர்கள் இந்த சம்பவம் குறித்து பேரூராட்சி ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.