சாப்பாடு போடவில்லை! அறையில் பூட்டி வைத்து சித்ரவதை! மாமியார் வீடு குறித்து ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட ஷாக் தகவல்!

மாமியாரும், நாத்தனாரும் தன்னை கொடுமைப்படுத்தி வெளியேறியதாக லாலு பிரசாத் யாதவின் மருமகள் கூறியிருப்பது பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ். இவருடைய மருமகளின் பெயர் ஐஸ்வர்யாராய். சில நாட்களுக்கு முன்னர் இவர் லாலு பிரசாத் யாதவ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அதற்காக ஐஸ்வர்யாராய் தற்போது ஒரு புகாரளித்துள்ளார். அதாவது லாலு பிரசாத் யாதவின் மனைவி மற்றும் அவரது மகளான விசா பாரதியும் தன்னை வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு வெளியேற்றியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஐஸ்வர்யாராய்க்கு கடந்த 3 மாதங்களாக லாலு பிரசாத் யாதவ் வீட்டில் உணவு வழங்கப்படவில்லை. சமையல் அறைக்குள் நுழைவதற்கு அவருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இவ்வளவு நாட்களும் தன்னுடைய தாயார் வீட்டில் இருந்து உணவை வரவழைத்து ஐஸ்வர்யா ராய் சாப்பிட்டுள்ளார். மேலும் அவரை வெளியே செல்லவிடாமல் மிசா பாரதி கொடுமைப்படுத்தியுள்ளார். இத்தகைய கொடூர சம்பவங்கள் குறித்து லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவிக்கும் தெரியும்.

மிசா பாரதிக்கு ஐஸ்வர்யா ராயும், தேஜ் பிரதாப் ஒன்றாக வாழ இஷ்டமில்லை. ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான சந்திரிகா ராய் என்பவரின் மகள் ஐஸ்வர்யா ராய் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கும் தேஜ் பிரதாப்புக்கும் 10 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. ஆனால் 6 மாதங்களிலேயே தேஜ் பிரதாப் விவாகரத்து வேண்டி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிறிதுகாலம் இருவரையும் ஒரே வீட்டில் வாழ வைக்குமாறு தீர்ப்பளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யாராயின் குற்றச்சாட்டுகள் பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.