சிதம்பரம் மாறுவேடத்தில் தப்பினாரா? காமெடி படம் வெளியிட்டது சி.பி.ஐ.தானா..?

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் எப்படியாவது சிதம்பரத்தை கைது செய்துவிட வேண்டும் என்று சி.பி.ஐ. துடியாக துடித்துக்கொண்டு இருக்கிறது.


 சிதம்பரத்தின் முன் ஜாமீன் விவகாரத்தை டெல்லி, உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுமே டெல்லியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இரவு நேரத்திலேயே சிதம்பரத்தை கைதுசெய்ய வேண்டும் என்று சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையினர் வீட்டை முற்றுகையிட்டனர். ஆனால், சிதம்பரம் அவர்கள் கையில் சிக்கவில்லை.

இன்று உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நிலையில், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கே பெரும் தயக்கம் நிலவுகிறது. ஏனென்றால் இந்த விவகாரம் அரசியலாக கருதப்படுவதால், முன் ஜாமீன் கொடுத்தாலும் தவறு, கொடுக்கவில்லை என்றாலும் சிக்கல் என்பதாலே பலரும் தப்பி ஓடுகிறார்கள்.

இந்த நிலையில் நாடு முழுவதும் ப.சிதம்பரம் பல்வேறு வேடங்களில் இருப்பது போன்ற ஒரு படம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இது எப்படி, யார் விடுத்தது என்று தெரியாமல் பலரும் தடுமாறிய போது, சி.பி.ஐ.யே வெளியிட்டிருக்கலாம் என்று பேச்சு கிளம்பியது.

அடப்பாவமே, கைது செய்ய வேண்டும் என்பதற்காக இப்படியா செய்வார்கள்?