திடீரென சேப்பாக்கம் மைதானத்திற்குள் புகுந்த மதுரைக்கார ரசிகர்! தோனி என்ன செய்தார் தெரியுமா?

விவோ ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க இருக்கிறது


அதனை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரர்களுக்கான ஒத்திகை பயிற்சி நேற்று மாலை நடைபெற்றது. இரவு 9 மணி அளவில் ஒத்திகை பயிற்சி முடிந்தவுடன் தடுப்புச் சுவரைத் தாண்டி வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்ட கூடிய இடத்திற்கு ரசிகர் ஒருவர் ஓடிச்சென்று தோனியை கட்டிப்பிடிக்க முயன்றுள்ளார்.

இதனை அறிந்த தோனி தாமாக முன்வந்து அந்த ரசிகருடன் கைகுலுக்கி கட்டிப்பிடித்து வாழ்த்துகளை தெரிவித்து அனுப்பி வைத்தார். ஆனால் அதற்கு முன்னதாக அந்த ரசிகருக்கு போக்கு காட்டியபடி தோனி ஓடி ஒளிந்து விளையாடியது மற்ற ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

பிறகு அந்த ரசிகரை திருவல்லிக்கேணி போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். அவர் மதுரையைச் சேர்ந்த அரவிந்த் குமார் என்றுஇவர் கல்லூரி மாணவர் என்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கிரிக்கெட் வீரர்களை பார்ப்பதற்காகவே மதுரையில் இருந்து நேற்று சென்னை வந்துள்ளார்.