எனக்கு பேட்டிங்கில் சிறந்த பார்ட்னர் தல தோனி தான்! நச்சுன்னு பதிலளித்த வீராட் கோலி!

கிரிக்கெட் போட்டிகளில் நான் பேட்டிங் செய்யும்போது தோனி தான் எனக்கு சிறந்த பார்ட்னர் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலக அளவில் நடக்கவிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்களது குடும்பத்தோடு நேரத்தை செலவழித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் நேரலையாக வந்த விராட் கோலி பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். நீங்கள் பேட்டிங் செய்யும் பொழுது உங்களுக்கு யார் சிறந்த பார்ட்னர் என்று கெவின் பீட்டர்சன் கேட்ட கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பொதுவாக எனக்கு வேகமாக ஓடுபவர்களை பிடிக்கும். மேலும் ரன்களை வேகமாக ஓடிக் எடுக்கும் போது நம்முடன் எதிர்முனையில் விளையாடுபவர்கள் நம்மை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் தோனி தான் என்னுடைய சிறந்த பார்ட்னர் என்று விராத் கோலி அதிரடியாக கூறினார். மேலும் எங்களது பேட்டிங் கூட்டணி இந்திய அணிக்காக இக்கட்டான கட்டத்தில் சிறந்த ரன்களை எடுத்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடும் போது தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் உடன் பேட்டிங் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.