நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய சீனியர் வீரர்! அவருக்கு பதிலாக அணியில் இடம் பிடித்த இளம் வீரர்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய அணி t20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாட விருக்கும் இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக பேட்டிங் செய்யாமல் இருந்த ஷிகர் தவான் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவருக்கு பதிலாக இந்திய அணியில் இளம் வீரர் பிரத்வி ஷா சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோல T20 தொடரில் இடம் பெற்றிருந்த தவான் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி:

விராட் கோலி, ரோகித் சர்மா, பிரித்வி ஷா, லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஷிவம் டுபே, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சஹால் ,பும்ரா, ஷமி, நவ்தீப் சைனி, தாக்கூர்.