இந்திய உலகக்கோப்பை கிரிக்கெட் அணியிலிருந்து காயம் காரணமாக ஷிகார் தவான் விலகியுள்ளார்.
தவானுக்கு பதில் உலக கோப்பையில் களம் காணும் இளம் வீரர் லண்டன் புறப்பட்டார்! யார் தெரியுமா?

கடந்த ஞாயிறு அன்று நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஷிகார் தவான் சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார் என்றே கூறலாம். அந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் வேக பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் வீசிய பந்து ஷிகார் தவானின் இடது கட்டை விரலில் பட்டது.
எனவே அந்த போட்டியில் அவர் பீல்டிங் செய்ய மைதானத்திற்கு வரவில்லை. மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி ஷிகர் தவானிற்கு இன்று ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவரின் இடது கட்டை விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் 3 வாரம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உலகக்கோப்பை அணியிலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷாப் பாண்ட் இன்னும் 48 மணி நேரத்தில் இங்கிலாந்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷிகர் தவானின் மருத்துவ அறிக்கை முழுவதுமாக வந்தவுடன், அதற்கேற்றாற்போல அவருக்கு பதிலாக வேறு வீரர் தேர்வு நடைபெறும் எனவும், அதில் ரிஷாப் பாண்ட் தேர்வு செய்யப்பட்டு உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.