காரை அதிவேகமாக ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கிய காரணத்தினால் கணவன் மற்றும் குழந்தையை இழந்த கீர்த்தனா கதறியதை பார்க்க பரிதாபமாக இருந்தது.
அதிவேகத்தில் காரை ஓட்டிய கிருத்திகா! கணவன், குழந்தையை பறிகொடுத்து கதறிய பரிதாபம்! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!
திருப்பூர்
சிறுபூவலப்பட்டியை சேர்ந்தவர் தொழில் அதிபர் சுப்புராஜ். இவர் தனது மனைவி மற்றும்
3 குழந்தையுடன் தனது ஆடி காரில் அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் புறப்பட்டுள்ளார்.
சுப்புராஜின்
நண்பரான மகேந்திரன் என்பவரும் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் வந்துள்ளனர்.
காரை சுப்புராஜின் மனைவி கிருத்திகா ஓட்டியுள்ளார். முன்புறம் சுப்புராஜ் தனது 3வயது
மகன் கவினுடன் அமர்ந்திருந்தார்.
பின்புறத்தில்
மகேந்திரன் தனது குடும்பத்துடன் இருந்துள்ளார். காஞ்சிபுரத்தை நோக்கி காரை கிருத்திகா
அதிவேகத்தில் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. தருமபுரியை அடுத்த சேசம்பட்டி பிரிவு
சாலையில் வந்த போது திடீரென கீர்த்தனாவின் கட்டுப்பாட்டை கார் இழந்தது.
மோதிய வேகத்தில் சாலை தடுப்பில் மோதி பள்ளத்தில் இரண்டு முறை பல்டி அடித்து விழுந்தது. இந்த கோர விபத்தில் காரின் முன்புறம் சீட் பெல்ட் அணியாமல் அமர்ந்திருந்த சுப்புராஜ் மற்றும் அவரது மகன் கவின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த மற்ற நான்கு பேரும் காயத்துடன் தப்பினர்.
இதில் சீட்
பெல்ட் அணிந்திருந்த காரணத்தினால் காரை ஓட்டி வந்த கிருத்திகா காயம் இன்றி தப்பினார்.
ஆனால் விபத்தில் கணவன் மற்றும் குழந்தையை பறிகொடுத்த அவர் சவக்கிடங்கில் மகன் சடலத்தை
மடியில் வைத்த படி கணவன் கால்களை பற்றி கதறியது காண்போரை கலங்கச் செய்தது.
பிறகு பிரேதப்பரிசோதனைக்காக
கிருத்திகாவிடம் இருந்து இருவரது சடலத்தையும் மருத்துவர்கள் பறித்தனர். அப்போது மருத்துவமனைக்கு
வெளியே வந்த கீர்த்திகா தனது மகன் மற்றும் கணவனை
எண்ணி புலம்பியபடியே கதறினார்.