இன்றைய சூழலில் இளைஞர்கள் உரையாடலில் ஹச்.ராஜா பற்றி பேசாமல் உரையாடல் இல்லை என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
தேவ் படத்தில் ஹெச்.ராஜாவை கலாய்த்து காட்சி ! அதிரடியாக நீக்கிய சென்சார் போர்டு!

இயக்குனர் ரஜித் ரவிசங்கர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வரும் 14 தேதி வெளியாக உள்ள தேவ் திரைபடத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது அப்போது பேசிய பாடலாசிரியர் தாமரை, தேவ் படத்தின் இயக்குர் ரஜித் ரவிசங்கருக்கு இது முதல் படம்.. தமிழ் சினிமாவின் நாளைய நம்பிக்கை நட்சத்திரம் இவர். எனக்கு சூர்யா மிகவும் பிடிக்கும். படத்தில் அனைவரும் இளைஞர்களாக இருக்கிறார்கள் இவர்களோடு பணியாற்றினால் நானும் இளமையாக தான் இருப்பேன்.
நடிகர் கார்த்தி பேசியதாவது, LKG யில் ஒண்ணாக படித்த நண்பன் தான் தேவ் படத்தின் தயாரிப்பாளர். எனக்கு பணத்தின் அருமையை சொல்லிக்கொடுத்தவர் அவங்க அம்மா தான். ஒருத்தரை வேலையை விட்டு வெளிஅனுப்ப சொன்னதால் அந்த தர்மசங்கடம் தாங்க முடியாமல் வேலையை விட்டு வந்துடான்
அப்படி வந்து தான் தொழில் கற்றுக்கொண்டு தயாரிப்பாளர் மாறிட்ட்டான். நாங்க ரெண்டு பேரும் சேந்து சயிட் அடிச்சுருக்கோம். பொதுவா படத்தில் காதலை சொல்லிவிட்டால் படம் முடிந்துவிடும் ஆனால் தேவ் படத்தில் அங்கு இருந்துதான் படம் துவங்குகிறது
இதன் பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு கார்த்தி பதில் சொன்னார். அப்போது காதல் கதை என்று கூறினீர்களே ஆனால் சென்சார் போர்டு ஹச்.ராஜா மற்றும் பிரதமர் எனக்கூறியதற்கு ஆடியோ மியூட் செய்யபட்டதே அப்படியானால் அரசியல் பேசப்பட்டாதா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அந்த காட்சியில் நானும் விக்கியும் பேசும் காட்சியில் ஹெச்.ராஜா குறித்து விக்கி பேசுவார். அதனை தான் மியூட் செய்துவிட்டார்கள்.இன்றைய சூழலில் இளைஞர்கள் உரையாடலில் ஹச்.ராஜா பற்றி பேசாமல் இருப்பது இல்லை. இவ்வாறு கார்த்தி கூறினார்.