துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இஸ்லாம் பெண்களுக்கு நிதியுதவி!

கொரோனா காலத்தில் பலருக்கும் பொருளாதார இழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதையொட்டி பலருக்கும் பல்வேறு வகையில் அ.தி.மு.கவினர் உதவி செய்து வருகின்றனர். இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


மாவட்ட ஆட்சியில் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முஸ்லீம் மகளிர் உதவும் சங்க உறுப்பினர்கள் 400 பெண்களுக்கு தலா ரூ.7500 வீதம் நிதியுதவியினை வழங்கினார். மேலும், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு, மீண்டும் உபயோகப்படுத்தும் வகையிலான தரமான மறுபயன்பாட்டு முக கவசங்களை வழங்கினார்.

அதோடு, ரஷ்யா- மாஸ்கோ நகரின் இந்திய தூதரகப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்ற தமிழகத்திலிருந்து கோவை- திருமதி.கீதா சீனிவாசன், சென்னை- திருமதி.தந்தரா ரெட்டி ஆகியோர் தேர்வு செய்ப்பட்டுள்ளதற்கு பாராட்டும், அவர்கள் கல்விப்பணி சிறக்க நல்வாழ்த்துக்களும் தெரிவித்தார்.