ரவுண்டு கட்டி கலக்கிய ரிஷாப் பாண்ட்! ராஜஸ்தான் அணியை தெறிக்க விட்டு வென்ற டெல்லி அணி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ipl போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில்  பேட்டிங் செய்தது. டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து திணறினர்.இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட  20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 115 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் அமித் மிஸ்ரா மற்றும் இஷாந்த் ஷர்மா சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தொடக்கத்தில் சொதப்பினாலும் அந்த அணியின் ரிஷாப் பாண்ட் சிறப்பாக ஆடி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வெற்றி பெற செய்தார். ரிஷாப் பாண்ட் அவுட் ஆகாமல் 53 ரன்களை எடுத்தார். 

இந்த வெற்றியின் மூலமாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக பிலே  ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.