ஆசை ஆசையாக காதல்..! ஆனந்த கல்யாணம்..! ஆனால் அவசரப்பட்டு 4 மாதத்தில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சியில் கணவன்!

காதலித்து திருமணம் செய்துகொண்ட பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டினம் என்னும் இடம் உள்ளது. இதற்கு அருகே ஜெகதாப்பட்டி என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு சென்றாயன் என்பவர் விவசாயம் தொழில் செய்து வந்தார். இவருடைய மகளின் பெயர் ரோஜா.

ரோஜாவின் வயது 24. இவர் பி.எஸ்.சி, பி.எட் பட்டம் பெற்றவராவார். இவருக்கு உறவினரான முனியப்பன் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி ரோஜா, முனியப்பனை 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

ரோஜா காதல் திருமணம் செய்து கொண்டதிலிருந்து அவருடைய பெற்றோர் அவரிடம் பேசுவதை நிறுத்தி கொண்டனர். மேலும் தலை தீபாவளிக்கும் ரோஜாவை அவருடைய பெற்றோர் அழைக்கவில்லை. இதனால் மன உளைச்சலிலிருந்த ரோஜா நேற்று காலை 11 மணியளவில் தன் கணவரான முனியப்பனுக்கு கால் செய்து புலம்பியுள்ளார்.

முனியப்பன் ரோஜாவை தேற்றியுள்ளார். வீட்டில் தனிமையாக இருந்த நேரத்தில் மதியம் 3 மணியளவில் ரோஜா தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ரோஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். திருமணமாகி 4 மாதங்கள் மட்டுமேயானதால், வழக்கை கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ வேதநாயகி விசாரித்து வருகிறார்.

இந்த சம்பவமானது கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.