ஒற்றை மலைப்பாம்பிடம் சிக்கிய 100கிலோ மான்..! உயிரை கொடுத்து காப்பாற்றிய டிரைவர்! பதைபதைப்பு வீடியோ உள்ளே!

கர்நாடக வனப்பகுதியில் அமைந்திருக்கும் சாலையில் 100 கிலோ எடை கொண்ட மானை, மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டு விழுங்க பார்த்த நிலையில் அவ்வழியாக வந்த கார் ஓட்டுனர் ஒருவர் தன் உயிரைக் கொடுத்து மானை காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் மனிதர்களின் நடமாட்டம் சாலைகளில் குறையத் தொடங்கியது. இதனை அடுத்து விலங்குகள் பாம்புகள் என பல உயிரினங்கள் சாலைகளில் சுதந்திரமாக திரிய தொடங்கியுள்ளன. அந்த வகையில் கர்நாடக வனப் பகுதிக்கு அருகே அமைந்திருக்கும் சாலையில் தற்போது நிகழ்ந்துள்ள சம்பவத்தின் வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. அதாவது அந்த வீடியோ பதிவில், 100 கிலோ எடை கொண்ட‌ மான் ஒன்று சாலையோரத்தில் சென்றுள்ளது. 

அதனைப் பார்த்த மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று அதனை விரட்டி பிடித்து அதன் உடலில் ஏறி சுற்றிக்கொண்டது. ஒரு கட்டத்தில் மானின் உடல் முழுவதும் தன்னுடைய கிடுக்கு பிடி போட்டு விழுங்க தயாராகி உள்ளது அந்த மலைப்பாம்பு . அந்நேரத்தில் சாலையில் கார் ஓட்டுனர் ஒருவர் தன் காரில் வந்து கொண்டிருக்கிறார். அப்பொழுது மான் ஒன்று மாலை பாம்பிடம் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதை பார்த்து ஓட்டுநர் தனது காரை நிறுத்தி இருக்கிறார். பின்னர் அவர் அருகில் இருந்த மரத்தில் இருந்து கிளை ஒன்றை உடைத்து வந்திருக்கிறார். 

அந்தக் கிளையை பயன்படுத்தி முதலில் மானின் உடலில் சுற்றிக் கொண்டிருந்த மலைப் பாம்பை விரட்ட முயற்சி செய்திருக்கிறார். அது தன்னை விரட்ட முயன்ற ஓட்டுநரை சீறிப் பாய்ந்து தாக்க முயற்சித்தது. இருப்பினும் விடாமுயற்சியோடு ஓட்டுனர் மானின் உடலில் சுற்றிக் கொண்டிருந்த மலைப்பாம்பை விரட்டியடித்தார். ஓட்டுனர் விரட்டியடித்த உடனே அந்த பாம்பு அருகிலிருந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது. பாம்பு தன் உடலை விட்டு வெளியேறியவுடன் அங்கிருந்து மான் உயிர் பிழைத்து தப்பி ஓடியது. இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.