தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி திருநாள் !!

இந்தியாவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி திருநாள் ஆகும்.


தீப ஒளி திருநாள் என்றழைக்கப்படும் தீபாவளித் திருநாள் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழகத்தில் கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழாக்களில் பொங்கலுக்கு பிறகு தீபாவளி பண்டிகையே ஆகும். 

தீபாவளி தினத்தன்று மக்கள் பொதுவாக புது ஆடை அணிந்து , வீடுகளை விளக்கால் அலங்கரித்து, சிறியவர் முதல் பெரியவர் வரை பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். நரகாசுரனை வதம் செய்த நாளை தமிழர்கள் தீபாவளியாகக் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.