ஹைதராபாத்தில் நிறைய ஆண் நண்பர்களுடன் பழகி வந்த தன் மகளைக் கண்டித்த தாயை, மகளே கொலை செய்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்கள் இல்லாமல் இருக்க முடியவில்லை! தாய் கொலை வழக்கில் கைதான இளம் மகள் பகீர் வாக்குமூலம்!

ஹைதராபாத்தில் உள்ள துவாரக காலனியில் வசித்து வருபவர் ஸ்ரீநிவாஸ் மற்றும் ரஜிதா தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 19 வயதில் கீர்த்தி என்ற மகள் ஒருவர் உள்ளார். ஸ்ரீனிவாஸ் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் பணி நிமித்தமாக அடிக்கடி தன்னுடைய குடும்பத்தை விட்டு விட்டு வெளியூருக்கு செல்வது வழக்கம். அந்தவகையில் பணி நிமித்தமாக வெளியூர் சென்ற ஸ்ரீநிவாஸ் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி வீடு திரும்பியிருக்கிறார்.
வீட்டிற்கு வந்தபோது வீட்டில் யாருமே இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே தன்னுடைய மகளுக்கு போன்செய்து பார்த்துள்ளார் . அப்போது மகள் கீர்த்தி, தான் விசாகப்பட்டினத்தில் இருப்பதாகவும் அம்மா எங்கு சென்றார் என்பதை பற்றி தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறார். இதனையடுத்து எங்கு தேடியும் ரஜிதா காணாததால் ஸ்ரீநிவாஸ் தன் மனைவியை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. முதலில் இவர்களது மகள் கீர்த்தியை போலீசார் விசாரணை செய்துள்ளனர் அப்போது பேசிய கீர்த்தி , தன்னுடைய அப்பா அடிக்கடி குடித்துவிட்டு வந்து தன் அம்மாவை அடித்துள்ளார். ஒருவேளை நான் வீட்டில் இல்லாத போது என் அப்பா என் அம்மாவை ஏதாவது செய்து இருக்கலாம் , ஆகையால் எனக்கு என் அப்பாவின் மீதுதான் சந்தேகமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இதனையடுத்து கீர்த்தி கூறிய பதிலை அடிப்படையாக வைத்து போலீசார் ஸ்ரீநிவாஸ் இடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின்போது கடந்த சில வாரமாகவே ஊரில் இல்லை என்றும் மேலும் அவர் பணி நிமித்தமாக வெளியூருக்கு சென்று இருந்ததும் உறுதியாகியுள்ளது. இதற்குப் பிறகு விசாரணை முடிவடைந்த நிலையில் கீர்த்தியும் அவரது தந்தை சீனிவாசன் வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.
தன் மனைவி காணாமல் போன அன்று கீர்த்தி தான் விசாகப்பட்டினத்தில் இருந்ததாகக் கூறி இருந்தது சீனிவாசனுக்கு ஞாபகம் வந்தது . தன் மகள் விசாகப்பட்டினத்தில் இருப்பதாக கூறியதைப் பற்றி விசாரித்துள்ளார் ஸ்ரீநிவாஸ். இதற்கு பின்பு கீர்த்தி விசாகப்பட்டினத்திற்கு செல்லவில்லை என்றும் அவர் அந்த நேரத்தில் தன்னுடைய ஆண் நண்பர் ஒருவர் வீட்டில் இருந்ததைப் பற்றியும் கண்டறிந்துள்ளார்.
இதனைப்பற்றி சந்தேகம் எழுந்த நிலையில் இந்த தகவலை போலீசாரிடமும் கூறி இருக்கிறார் ஸ்ரீனிவாஸ். இதனையடுத்து போலீஸின் கண்கள் கீர்த்தியின் பக்கம் திரும்பியது. அதுமட்டுமில்லாமல் ரஜிதாவின் உடல் ரமணா பேட்டை ரயில் தண்டவாளத்தில் அழுகிய நிலையில் போலீசார் கைப்பற்றினர். இதன் அடிப்படையில் போலீசார் கீர்த்தியை தீவிரமாக விசாரணை செய்துள்ளனர். விசாரணை செய்யும்போது போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விசாரணையின்போது பேசிய கீர்த்தி , தனக்கு நிறைய ஆண் நண்பர்களுடன் நெருங்கிய பழக்கம் இருப்பதால் அதனை தன்னுடைய அம்மா எதிர்ப்பதாக கூறியிருக்கிறார் . அம்மா ரஜிதா கூறிய இந்த கருத்து பிடிக்காததால் தன்னுடைய ஆண் நண்பர்கள் சிலரின் உதவியுடன் கீர்த்தி கொலை செய்திருக்கிறார் . சிறிது நாட்கள் அவரது இல்லத்திலேயே வைத்திருந்திருக்கிறார். அதற்கு பின்பு இது தற்கொலையாக மாற்றியமைக்க வேண்டும் எனும் நோக்கில் உடலை கொண்டுபோய் ரமணாபேட்டை ரயில்நிலைய தண்டவாளத்தில் வைத்திருக்கிறார்.
இந்த தகவலை விசாரணையின்போது கீர்த்தி போலீசாரிடம் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கீர்த்திக்கு தன் தாயை கொலை செய்யும்போது உதவியாக இருந்த சசி மற்றும் பால் ரெட்டி ஆகியோரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகாத சகவாசம் வேண்டாம் என்று கூறிய தாயை , மகளே கொலை செய்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.