7 பேருக்கு உயிர் கொடுத்துவிட்டு உயிரிழந்த இளம் பெண் பேராசிரியை! தஞ்சையை உலுக்கிய நெகிழ்ச்சி சம்பவம்!

சாலை விபத்தில் உயிரிழந்த சொந்த மகளின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்துள்ள சம்பவமானது தஞ்சாவூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு கனிமொழி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சின்னஞ்சிறு வயதிலிருந்தே ஆசிரியராக வேண்டும் என்ற நோக்கத்துடன் படித்து வந்துள்ளார். நோக்கத்தை நிறைவேற்றும் எண்ணத்தில் படித்து வந்ததால், அவரால் சாதிக்க இயன்றது. 

அதே மாவட்டத்தில் உள்ள தமிழ் பல்கலைகழகத்தில் கௌரவப் பேராசிரியராக பணியாற்றுவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதனை சீரும் சிறப்புமாக அவர் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சென்ற மாதம் 27-ஆம் தேதியன்று கல்லூரிக்கு தஞ்சாவூர்-திருச்சி நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராவிதமாக கார் மோதி விபத்துக்குள்ளானார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மீனாட்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். உடனடியாக கல்லூரி நிர்வாகம் கனிமொழியின் பெற்றோரிடம் நிகழ்ந்தவற்றை கூறியுள்ளது.

கனிமொழியின் பெற்றோர் மீனாட்சி மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள்லேயே கனிமொழி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அவர்களிடம் கூறியுள்ளனர். இதனால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

தங்கள் மகளின் உதவும் குணத்தை போற்றும் வகையில், கனிமொழியின் உடலுறுப்புகளை தானம் செய்வதற்கு முடிவெடுத்தனர். 7 பேருக்கு கனிமொழியின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு மருத்துவர் நிர்வாகம் முடிவெடுத்தனர்.  கனிமொழியின் ஒரு சிறுநீரகமானது மதுரை மீனாக்ஷி மருத்துவமனையிலேயே தானமாக கொடுக்கப்பட்டது. மற்றொரு சிறுநீரகமானது திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னை மற்றும் மதுரையிலுள்ள மருத்துவமனைகளுக்கு பிற உறுப்புகள் தானமாக விமானத்தின் மூலம் எடுத்து செல்லப்பட்டன. ஆசைஆசையாக வளர்க்கப்பட்ட கணிமொழி உயிரோடு இல்லை என்றாலும், 7 பெண்களின் உடல்களில் கலந்திருப்பதாக கதறி அழுது கனிமொழியின் தந்தை பெருமிதம் அடைந்தது மருத்துவமனையில் அனைவரையும் கண்கலங்க வைத்தது.

இந்த சம்பவமானது தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.