பெற்ற தந்தையிடம் ரூ.10 லட்சம் அபேஸ்! கனடா செல்ல காதலனுடன் சேர்ந்து மகள் அரங்கேற்றிய பகீர் நாடகம்!

தந்தையை ஏமாற்றி பெண் பணத்தை பறித்த சம்பவமானது கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரியில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகளின் பெயர்  வித்யா. இவர் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். 

வியாழக்கிழமை அன்று கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வித்யா தன்னுடைய சகோதரருக்கு வாட்ஸ்அப் மூலம் கால் செய்துள்ளார். அந்த காலில் தன்னை மர்ம நபர் ஒருவர் கடத்தி விட்டதாக அழுதுள்ளார். உடனடியாக செல்போனை கட் செய்துள்ளார்.

5 மணி நேரம் கழித்து வித்யாவின் தந்தைக்கு அழைப்பு வந்துள்ளது. அழைப்பில் பேசியவர் 10 லட்சம் ரூபாய் கொடுக்கவில்லையென்றால் வித்யாவை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் கிருஷ்ணகிரியிலிருந்து கோயம்பேடுக்கு வந்து காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தனிப்படை அமைத்து வித்யாவை தேடி வந்தனர். கோயம்பேடு பேருந்தில் அமைத்திருந்த சிசிடிவி கேமராக்களை கண்காணித்தபோது வித்யா சாதாரண செல்போன் வைத்து இருந்ததாக தெரிந்தது. அவருடைய நம்பரை ட்ரேக்கிங் செய்து பார்த்த போது சென்னை மீனம்பாக்கத்தில் வித்யா கால் செய்துள்ளது தெரியவந்தது.

பின்னர் அந்த மொபைல் நம்பர் புதுச்சேரி காரைக்காலுக்கு சென்றுள்ளது. உடனடியாக காவல்துறையினர் காரைக்கால் சென்றனர். அங்குள்ள கல்லூரியில் தான் வித்யா நர்சிங் படிப்பு படித்து வந்தார். புதுச்சேரியில் வித் யானைக்கு மிகவும் நெருங்கிய தோழியான அக்ஷயாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், வித்யா மனோஜ் என்பவரை காதலித்து வந்தார் என்றும் கூறியுள்ளார்.

காவல்துறையினர் மனோஜிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனக்கும், இந்த சம்பவத்திற்கும் சம்பந்தமில்லையென்று கூறியுள்ளார். தற்போது அவர் மலேசியாவில் பொறியியல் படித்துவிட்டு கடலூரில் வசித்து வருவதாகவும் கூறினார். வேண்டுமென்றால் நேரில் ஆஜராவதாக ஒப்புதலளித்தார். அப்போது காவல்துறையினர் அவரை கடலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போதும் மனோஜ் ஒப்புக்கொள்ளவில்லை.

சிறப்பு முறையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது மனோஜ் வேறு வழியின்றி உண்மையை ஒப்புக்கொண்டார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறினார். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் ஒரு கடத்தல் நாடகத்தை விளையாடி வெளிநாட்டிற்கு சென்று கலப்புத்திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

கனடாவுக்கு செல்ல அதிக பணம் தேவைப்படும். தன்னுடைய தந்தை நிலத்தை விற்று 14 லட்சம் ரூபாயை எடுத்துள்ளார். வித்யாவுடன் கடத்தல் நாடகமாடி 10 லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அதற்குள் அவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் சிக்கி கொண்டனர். இருவரையும் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது கோயம்பேட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.