6 வயசு தருணுடன் மாயமான 26 வயது நதியா..! இப்படியும் நடக்குமா? அதிர்ச்சியில் உறைந்த சிறுவனின் தந்தை! ஆண்டிப்பட்டி பரபரப்பு!

பெத்த மகளும், பேரனும் திடீரென மாயமாகி உள்ளதால் தந்தை அதிர்ச்சி அடைந்த சம்பவமானது ஆண்டிப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆண்டிப்பட்டி அருகே கடமலைகுண்டு எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள வைகை நகர் எனும் இடத்தைச் சேர்ந்தவர் நதியா. நதியாவின் வயது 26. இவருக்கு 9 ஆண்டுகளுக்கு முன்னர் பாலூத்து பகுதியை சேர்ந்த ஜெயக்கண்ணன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. நதியாவின் தந்தையின் பெயர் பாக்கியநாதன்.

இத்தம்பதியினருக்கு தருண் என்ற 6 வயது மகன், மற்றும் ஒரு மகளுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் பாக்கியநாதனுக்கு உடல்நலம் குன்றியுள்ளதாக நதியாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக நதியா தருணுடன் தன்னுடைய தந்தையை உடனிருந்து கவனித்து கொள்வதற்காக சென்றுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் தருண் மற்றும் நதியா, பாக்கியநாதன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளனர். 

நெடுநேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால் பாக்கியநாதன் அதிர்ச்சியடைந்து அப்பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் இருவரும் மாயமானார்களா அல்லது கடத்தப்பட்டாரா என்ற ரீதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.