லஞ்சமாடி கேட்குற..! ஆபிசுக்குள் வைத்து பெண் தாசில்தாரை உயிரோடு தீ வைத்து எரித்த விவசாயி! அதிர்ச்சி காரணம்!

பெண் தாசில்தார் உயிருடன் தீவைத்து எரித்து கொல்லப்பட்ட சம்பவமானது தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கானா மாநிலத்தில் ஹயாத்நகர் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் பெண் தாசில்தாராக விஜயா ரெட்டி என்ற பெண் பணியாற்றி வருகிறார். இன்றும் வழக்கம்போல அலுவலகத்தில் தன்னுடைய வேலைகளை செய்து வந்துள்ளார்.

மதியம் 1:40 மணியளவிற்கு அலுவலகத்திற்கு சுரேஷ் என்பவர் வந்துள்ளார். இவர் விஜயாவிடம் அவருடைய அறையில் சிறிது நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது திடீரென்று காப்பாற்றுமாறு விஜயா அலறியுள்ளார்.

விஜயாவின் உதவியாளரும், வாகன ஓட்டுநரும் அவருடைய அறைக்கு விரைந்து சென்றனர். அப்போது விஜயாவின் உடல் முழுவதும் தீ பரவி இருந்ததை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். விஜயாவை காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் காப்பாற்ற இயலவில்லை. சம்பவ இடத்திலேயே விஜயா உடல் கருகி இறந்து போனார். காப்பாற்ற முயன்ற இருவருக்கும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிறிது தீக்காயங்களுடன் அந்த இடத்தில் இருந்து தப்பி சென்ற சுரேஷ் அப்பகுதி காவல்நிலையத்தில் சரணடைந்தார். காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, "பச்சரம் கிராமத்தில் தனக்கு 7 ஏக்கர் பரப்பளவில் நிலம் இருப்பதாகவும், அந்த நிலத்தில் சிறிய பிரச்சினைகள் ஏற்பட்டதால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனிடையே நிலத்தின் மீதான வழக்கு குறித்து பிரச்சனையை தீர்க்க தாசில்தார் அதிகம் லஞ்சம் கேட்டார்.,

எவ்வளவோ கெஞ்சியும் லஞ்சப்பணத்தில் அவர் உறுதியாக இருந்தார். இதனால் தான் என்னிடமா லஞ்சம் கேட்கிறார் என்கிற ஆத்திரத்தில் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறியுள்ளார். 

வருவாய்த்துறை அதிகாரிகள் தாசில்தார் அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர். தாசில்தாருக்கு ஏற்பட்ட துயர சம்பவத்தை கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.