4 நாளில் ரூ.150 கோடி! வசூல் தர்பார் நடத்தும் ரஜினி! தல - தளபதி சாதனைகள் தூள் தூள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர் .முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படம் நேற்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.


ரஜினி நீண்ட நாட்களுக்குப் பிறகு மாசான போலீஸ் கேரக்டரில் ரஜினி நடிப்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தர்பார் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தில் வில்லனாக சுனில் ஷெட்டியும், காமெடி ரோலில் யோகி பாபுவும் கலக்கியுள்ளனர். 

தர்பார் திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சி அனுமதிக்கப்பட்டதால் நேற்று அதிகாலை முதல் ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து தர்பார் படத்தை கொண்டாடி வருகின்றனர். தர்பார் திரைப்படம் தனியாக ரிலீசாகி உள்ளதால் உலகமெங்கும் உள்ள முக்கிய தியேட்டர்களில் தர்பார் படம் ரிலீஸாகியுள்ளது. இதனால் வசூலில் இந்த படம் சாதனை புரியும் என்று ஏற்கனவே எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் தர்பார் திரைப்படம் முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனிவரும் நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் தர்பார் திரைப்படத்தின் வசூல் வேட்டை தொடர்ந்து அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மட்டும் தர்பார் திரைப்படம் நேற்று 2.27 கோடி வசூல் செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் மட்டுமே இந்த திரைப்படம் ஏழேகால் கோடியை வசூல் செய்துள்ளது. தமிழகத்தைப் போலவே இந்தியாவின் பல மாநிலங்களிலும் திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.

உலகம் முழுவதிலும் இந்த திரைப்படம் தற்போது 150 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ள தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ஆனது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.