ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் எந்திரத்தில் ஏறிய 10 அடி நீள கொடிய விஷப் பாம்பு..! அங்கு அது செய்தது என்ன தெரியுமா?

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் எந்திரத்துக்குள் பத்தடி நீளம் கொடிய விஷப்பாம்பு புகுந்துகொண்டு அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


உத்திரபிரதேசத்தில் காசியாபாத் என்ற இடம் அமைந்துள்ளது. காசியாபாத்தில் இருக்கும் கோவிந்தபுரத்தின் டெஹ்ராடூன் பப்ளிக் பள்ளிக்கு அருகிலுள்ள ஜே-பிளாக் சந்தையில் ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் அந்த பகுதியில் இந்த ஏடிஎம் இயந்திரத்தின் பயன்பாடு சற்று குறைவாக காணப்படுகிறது. இந்நிலையில் திடீரென்று ஏடிஎம் எந்திரத்தின் காவலாளியின் அலறல் சத்தம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக அந்த ஏடிஎம் வாசலில் வந்து சேர்ந்துள்ளனர். பதறியடித்து வந்த மக்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ஏடிஎம் இயந்திரத்திற்குள் 10 அடி நீளம் கொண்ட கொடிய விஷப் பாம்பு ஒன்று புகுந்து கொண்டு அங்கிருந்தவர்களை அஞ்ச வைத்துள்ளது. இந்த பாம்பை கண்ட ஏடிஎம் காவலாளி உடனடியாக கூப்பாடு போட்டு அனைவரையும் உதவிக்கு அழைத்துள்ளார்.

கையோடு உடனடியாக ஏடிஎம் வாசலின் கதவை பூட்டி விட்டார். இதன் மூலம் பாம்பு வெளியே செல்ல முடியாமல் அந்த இயந்திரத்திற்கு உள்ளேயே இருக்கும் என அவர் கணக்கிட்டுள்ளார். உடனடியாக அங்கு வந்த பொதுமக்கள் பாம்பை அங்கு இருந்து அப்புறப்படுத்துவதற்கு என்ன வழி என்று யோசித்து உள்ளனர். உடனே அங்கிருந்தவர்கள் இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் தகவல் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.