எடப்பாடி பதவிக்கு ஆபத்து? டெல்லி விரைந்த 2 முக்கிய அமைச்சர்கள்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் இரண்டு அமைச்சர்கள் டெல்லி சென்று உள்ளனர்.


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷாவை சந்தித்து பேசினார். டெல்லியில் இருந்து வந்த அவர் அழைப்பை தொடர்ந்து பன்வாரிலால் அங்கு சென்றதாக கூறப்பட்டது. தமிழகத்தில் முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடியை மாற்றி விட்டு போ பன்னீர்செல்வத்தை நியமிக்க பாஜக மேலிடம் விரும்புவதாக கடந்த சில நாட்களாகவே தகவல் வெளியாகி வந்தது.

நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு எடப்பாடி தரப்பில் இருந்து நிதி உதவி செய்யப்பட்டதாக ஒரு புகார் எழுந்துள்ளது. இதனால் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடாகவே கடந்த சில நாட்களாக எடப்பாடி தரப்புடன் டெல்லி மேலிடம் தொடர்புகளை முற்றிலுமாக துண்டித்து விட்டதாக சொல்லப்பட்டது.

இதனால் எடப்பாடி கவலைகள் இருந்த நிலையில் முதலமைச்சர் பதவியை நினைத்து ஓபிஎஸ் மகிழ்ச்சியில் திக்குமுக்காட வந்தார். இந்தநிலையில் ஆளுநருக்கு திடீரென அழைப்பு வந்ததால் அவர் டெல்லி சென்றுள்ளார். இதனால் எடப்பாடி தரப்பு தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாகவே அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி டெல்லி சென்றுள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வலது மற்றும் இடது கரமாக கருதப்படுபவர்கள் இந்த இரண்டு அமைச்சர்கள் தான்.

டெல்லி சென்ற அவர்கள் நிர்மலா சீதாராமன் சந்திக்க முயற்சி மேற் கொண்டதாகவும் ஆனால் படத்தயாரிப்பில் அவர் பிஸியாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியாத நிலையில் பியூஸ் கோயலை இருவரும் சந்தித்ததாக சொல்லப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்புவரை தமிழக அரசியல் நிலவரத்தை பாஜக சார்பில் பியூஸ் கோயல் தான் கவனித்து வந்தார். ஆனால் புதிய மத்திய அமைச்சரவை பதவி ஏற்ற பிறகு தமிழகத்தை கவனிக்கும் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

இருந்தாலும் கூட அவரை சந்தித்து அமைச்சர்கள் இருவரும் பேசி விட்டு வெளியிலேயே காத்திருக்கின்றனர். நிர்மலா சீத்தாராமன் சந்தித்து ஏற்பட்ட மனக் கசப்புகளை சரிசெய்து எடப்பாடியின் பதவியைக் காப்பாற்ற அமைச்சர்கள் இருவரும் தீவிரமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆளுனர் டெல்லி விரைவு அமைச்சர்கள் 2 பேர் டெல்லியில் முகாம் என தமிழக அரசியல் தற்போது டெல்லியை நோக்கி நகர்ந்துள்ளது.